யாரு சாமி அவன்.. பட்ஜெட்ல 26GB ரேம்.. OLED டிஸ்பிளே.. AI கேமரா.. 5000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டே மிரளும்படியான பட்ஜெட்டில் 26 ஜிபி ரேம், ஓஎல்இடி டிஸ்பிளே, 50 எம்பி மெயின் கேமரா, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி, IP65 ரெசிஸ்டன்ட், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், வாய்ஸ் சேஞ்சர், கேமிங் பிரியர்களுக்கான ஜிடி மோட் போன்ற அல்ட்ரா பீச்சர்களுடன் ரியல்மி பி1 ஸ்பீடு (Realme P1 Speed) போன் வெளியாக இருக்கிறது. இந்த ரியல்மி போனின் வெளியீட்டு தேதி, விற்பனை விவரங்கள் மற்றும் உறுதி செய்யப்பட்ட பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்த ரியல்மி பி1 ஸ்பீடு போன் கேமிங் பிரியர்களுக்கான பிரீமியம் பீச்சர்களை பட்ஜெட்டில் பேக் செய்துள்ளது. அக்டோபர் 15ஆம் தேதி இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிப்செட், கேமரா, பேட்டரி மற்றும் ரேம் விவரங்கள் வெளியாக ஸ்மார்ட்போன் மார்கெட்டை அதிர விட்டுள்ளது.

ரியல்மி பி1 ஸ்பீடு அம்சங்கள் (Realme P1 Speed Specifications): இந்த ரியல்மி மாடலில் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கேமிங் பிரியர்களுக்காக 90 ஃஎப்பிஎஸ் (90 FPS) சப்போர்ட் வருகிறது. பிளாட் டிஸ்பிளே டிசைன் (Flat Display Design) வருகிறது. கேமிங் என்ஹான்ஸ்மென்ட் கொடுக்க ஜிடி மோட் (GT Mode) பேக் செய்யப்பட்டுள்ளது. ப்ளூ கலரில் கிடைக்க இருக்கிறது.
2.8டி மைக்ரோ கர்வ் (Micro-Curve) பாடி டிசைன் மற்றும் 7.6 எம்எம் ஸ்லிம் கொண்டிருக்கிறது. 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி வருகிறது. விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) சப்போர்ட் உடன் மொத்தமாக 26 ஜிபி ரேம் கிடைக்கிறது. ஆகவே, பட்டையை கிளப்பும்படி லாக்-ப்ரீ பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கலாம். இதுபோக கேமிங் பிரியர்களுக்கு பக்கா அவுட்புட் கொடுக்கும் சிப்செட் உள்ளது.
ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 எனர்ஜி 5ஜி (Octa Core MediaTek Dimensity 7300 Energy 5G) சிப்செட் பேக் செய்யப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கட்டாயம் எதிர்பார்க்கலாம். கேமராவை பொறுத்தவரையில், பி1 சீரிஸ் மாடல்களில் வந்த சர்க்குலர் கேமரா டிசைன் (Circular Camera Design) வருகிறது. 50 எம்பி ஏஐ மெயின் கேமரா பேக் செய்யப்பட்டுள்ளது.
ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் விசி கூலிங் சிஸ்டம் (Stainless Steel VC Cooling System) வருகிறது. இந்த ரியல்மி பி1 ஸ்பீடு போனில் 45W அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் (Ultra Fast Charging) சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. ஸ்மார்ட் பீச்சர்களை பார்க்கையில், ஏஐ ஐ புரொடெக்சன் (AI Eye Protection) வருகிறது. இன்-பில்ட் வாய்ஸ் சேஞ்சர் (Voice Changer) சப்போர்ட் கொண்டிருக்கிறது.
கேமிங் ஆடியோ அவுட்புட் கொடுக்க ஸ்டீரியோ டூயல் ஸ்பீக்கர்கள் (Strereo Dual Speakers) கிடைக்கின்றன. மேற்கண்ட பீச்சர்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. மற்ற பீச்சர்கள் அக்டோபர் 15ஆம் தேதி தெரிந்துவிடும். இருப்பினும், இதுவொரு 5ஜி வேரியண்ட் என்பதில் சந்தேகமில்லை. அதேபோல மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டை விட மலிவாக கிடைக்க இருக்கிறது.
ஏனென்றால், ரியல்மி பி1 ப்ரோ மாடலின் விலை ரூ.21,999 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட்டது. இப்போது, டிஸ்கவுண்ட்டில் ரூ.20,000 பட்ஜெட்டுக்குள் கிடைக்கிறது. ஆகவே, இந்த ரியல்மி பி1 ஸ்பீடு மாடலின் விலை ரூ.25,000 பட்ஜெட்டுக்குள் இருக்க அதிக வாய்ப்புள்ளது. அதைவிட அதிக விலைக்கு வெளியாவது சந்தேகம்தான். கேமிங் பிரியர்களுக்கான மாடலாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








