Realme P1 Speed 5G அறிமுக தேதி அறிவிப்பு.. என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?
மாதத்திற்கு 2 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யாவிட்டால் தூக்கம் வராத நிறுவனமான ரியல்மி, இந்திய சந்தையில் அதன் அடுத்த ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை உறுதி செய்துள்ளது. அது ரியல்மி பி1 ஸ்பீட் 5ஜி (Realme P1 Speed 5G) ஸ்மார்ட்போன் ஆகும். இது எந்த தேதியில் அறிமுகமாகும்? இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்?இது என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? அடுத்தடுத்து வேறு என்னென்ன ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன? இதோ விவரங்கள்:
ரியல்மி பி1 ஸ்பீட் 5ஜி எப்போது அறிமுகமாகும்? இது வருகிற அக்டோபர் 15 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று ரியல்மி உறுதிப்படுத்தியுள்ளது. இது ரியல்மி நிறுவனத்தின் பி1 சீரிஸில் மற்றொரு "மெம்பர்" ஆகா இருக்கும் என்பதில் சந்தேகமேவேண்டாம். நினைவூட்டும் வண்ணம் கடந்த 2024 ஏப்ரலில் இதே பி1 சீரீஸின் கீழ் ரியல்மி பி1 ப்ரோ 5ஜி (Realme P1 Pro 5G) மற்றும் ரியல்மி பி1 5ஜி (Realme P1 5G) மாடல்கள் அறிமுகமாகின.

அதன் தொடர்ச்சியாக ரியல்மி பி1 ஸ்பீட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது அக்டோபர் 15 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அறிமுகத்தை தொடர்ந்து இது பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் ரியல்மி இந்தியா இ-ஸ்டோர் வழியாக விற்பனை செய்யப்படும் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ரியல்மி பி1 ஸ்பீட் 5ஜி என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இந்த போன் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 எனர்ஜி சிப்செட் (MediaTek Dimesnity 7300 Energy SoC) உடன் வரும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது 4என்எம் செயல்பாட்டில் உருவாக்கப்பட்டுள்ள சிப்செட் ஆகும். இந்த ஸ்மார்ட்போன் AnTuTu v10 தரப்படுத்தல் தளத்தில் 750K புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளதாக ரியல்மி கூறுகிறது.
மீடியாடெக் டைமன்சிட்டி 7300 எனர்ஜி சிப்செட்டில் நான்கு கோர்டெக்ஸ் ஏ78 கோர்கள், நான்கு கார்டெக்ஸ் ஏ55 கோர்கள் மற்றும் மாலி ஜி615 எம்பி2 ஜிபியு உள்ளது. இதன்மூலம் கேமிங், ஸ்ட்ரீமிங், மல்டிடாஸ்கிங் மற்றும் பலவற்றையும் இந்த ஸ்மார்ட்போனை எளிதாக கையாள முடியும்.
கேமராக்களை பொறுத்தவரை , வெளியான டீஸர், இது வெண்ணிலா ரியல்மி பி1 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளதை போன்ற கேமரா யூனிட்டை முன்னிலைப்படுத்துகிறது. மேலும் இது ப்ளூ கலர் ஷேடில் பேக் பேனலில் ஒரு கடினமான வடிவமைப்பையும் வெளிப்படுத்துகிறது. இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா செட்டப் இடம்பெறலாம்
அதில் 50எம்பி ப்ரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா இருக்கலாம். டிஸ்பிளேவை பொறுத்தவரை இது AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். கடைசியாக இது 5000mAh பேட்டரி உடன் SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டிருக்கலாம். அதாவது ரியல்மி பி1 ஸ்பீட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது அதன் வெண்ணிலா வேரியண்ட் உடன் பல முக்கிய அம்சங்களை பகிர்ந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரியல்மி பி1 ஸ்பீட் 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியவாயில் என்ன விலைக்கு அறிமுகமாகும்? இது ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம். இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இது ரூ.17,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம். அதாவது இது ரியல்மி பி1 5ஜி மற்றும் ரியல்மி பி1 ப்ரோ 5ஜி ஆகிய இரண்டிற்கும் இடையே அமரும்படியான விலைக்கு வரும்.
நினைவூட்டும் வண்ணம் ரியல்மி பி1 5ஜி மற்றும் ரியல்மி பி1 ப்ரோ 5ஜி ஆகியவைகள் முறையே ரூ.14,999 மற்றும் ரூ.19,999 க்கு இந்தியாவில் அறிமுகமாகின. இந்த இடத்தில் ரியல்மி பி2 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது கடந்த மாதம் தான் அறிமுகமானது; அதன் ஆரம்ப விலை ரூ.21,999 ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








