Home
Mobile

ஆர்டர் போட்ருங்க.. AMOLED டிஸ்பிளே.. 45W சார்ஜிங்.. ஆஃபரில் Realme 5ஜி போன்.. எந்த மாடல்?

இந்தியாவில் ரியல்மி நிறுவனம் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. எனவே தான் இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு போன்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் ரியல்மி பி1 5ஜி (Realme P1 5G) ஸ்மார்ட்போன் ஆனது பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது பிளிப்கார்ட் தளத்தில் ரியல்மி பி1 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 33 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.13,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் 5 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

ஆர்டர் போட்ருங்க.. ஆஃபரில் Realme 5ஜி போன்.. எந்த மாடல்?

ரியல்மி பி1 5ஜி அம்சங்கள் (Realme P1 5G Specifications): தரமான ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7050 6nm)சிப்செட் கொண்டுள்ளது இந்த ரியல்மி பி1 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் ரியல்மி யுஐ 5.0 (realme UI 5.0)சார்ந்த ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது.

ரியல்மி பி1 5ஜி போன் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கொண்டுள்ளது . மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டு வெளிவந்துள்ளது இந்த போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான படங்களை எடுக்க முடியும்.

நைட் மோட் (Night Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), ஸ்ட்ரீட் மோட் (Street Mode) போன்ற போட்டோகிராபி பீச்சர்கள் கொண்டுள்ளது இந்த ரியல்மி பி1 5ஜி ஸ்மார்ட்போன். டூயல் வியூ-வீடியோ (Dual-view Video), ஃபிலிம் மோட் (Film Mode), டில்ட் ஸ்விப்ட் (Tift Shift) போன்ற வீடியோ பீச்சர்கள் இந்த போனில் உள்ளன.

அதேபோல் 6.67 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது ரியல்மி பி1 5ஜி போன். 2400 ×1080 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் ரெயின் வாட்டர் ஸ்மார்ட் டச் (Rainwater Smart Touch) சப்போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.

குறிப்பாக 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த போன். பின்பு மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே 3டி ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (In-display 3D Fingerprint Scanner) கொண்டிருக்கிறது ரியல்மி பி1 5ஜி ஸ்மார்ட்போன்.

IP54 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் இந்த ரியல்மி பி1 5ஜி போன் வெளிவந்துள்ளது. பீனிக்ஸ் ரெட் (Phoenix Red) மற்றும் பீகாக் கிரீன் (Peacock Green) நிறங்களில் இந்த போனை வாங்கலாம்.

குறிப்பாக 5000mAh பேட்டரி உடன் இந்த ரியல்மி பி1 5ஜி போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேசமயம் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
realme P1 5G with 8GB RAM available at discounted price on Flipkart: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X