அடிச்சு தூக்குது ஆர்டர்.. வெறும் ரூ.14000 பட்ஜெட்ல 12GB ரேம்.. AMOLED டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
ரூ.15000 பட்ஜெட்டில் கேமிங் பிரியர்கள், கேமரா பிரியர்கள் மட்டுமல்லாமல், ஓடிடி பிரியர்களுக்கான டிஸ்பிளே பீச்சர்களையும் பேக் செய்யும்படி ஸ்மார்ட்போன் கேட்கும் கஸ்டமர்களுக்கு ரியல்மி பி1 5ஜி (Realme P1 5G) போன் பட்டையை கிளப்பும் ஆப்ஷனாக இருக்கும். பீச்சர்கள் மட்டுமல்லாமல், பிரீமியம் டிசைனில் பின்னிப்பெடல் எடுக்கும்படி இருக்கும். இப்போது பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் பட்டையை கிளப்பும்படி டிஸ்கவுண்ட் வந்துள்ளது. முதலில் இந்த ரியல்மி பி1 5ஜி போனின் முழு பீச்சர்களை பார்த்துவிட்டு, விலை விவரங்களை தெரிந்து கொள்வோம்.
ரியல்மி பி1 5ஜி அம்சங்கள் (Realme P1 5G Specifications): இந்த ரியல்மி போன் பட்ஜெட்டில் மிட்-ரேஞ்ச் டிஸ்பிளே அவுட்புட் எதிர்பார்க்கும் கஸ்டமர்களுக்கு பக்காவாக இருக்கிறது. ஏனென்றால், 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்காத ரெயின் வாட்டர் ஸ்மார்ட் டச் (Rain Water Smart Touch) கிடைக்கிறது.

கேமிங் மற்றும் லாக்-பிரீ அவுட்புட் கொடுக்கும்படி 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.7 இன்ச் (2400 ×1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே இருக்கிறது. பர்ஃபாமென்ஸ் பக்கம் பார்த்தால், 2 ஓஎஸ் அப்டேட் மற்றும் 3 வருட செக்யூரிட்டி அப்டேட் கொண்ட ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கிடைக்கிறது. ரியல்மி யுஐ 5.0 (realme UI 5.0) பேஸ்டு வெர்ஷனாக இது இருக்கிறது.
இந்த ஓஎஸ்களுடன் மிட்-ரேஞ்ச் அவுட்புட் கொடுக்கக்கூடிய ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7050 6nm) சிப்செட் மற்றும் மாலி ஜி-68 ஜிபியு (Mali-G68 GPU) கிராபிக்ஸ் கார்டு பேக் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, பர்ஃபாமென்ஸ் பட்ஜெட்டைவிட கூடுதலாகவே இருக்கும். விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் (Virtual RAM Support) கிடைக்கிறது.
ஆகவே, இந்த ரியல்மி பி1 5ஜி போனில் 6 ஜிபி ரேம் (6 ஜிபி விர்ச்சுவல் ரேம்) மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ஆர்டருக்கு கிடைக்கிறது. அதேபோல 8 ஜிபி ரேம் (8 ஜிபி விர்ச்சுவல் ரேம்) மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட டாப் வேரியண்ட்டும் விற்பனைக்கு வருகிறது. இந்த வேரியண்ட்களில் கூடுதலாக மைக்ரோஎஸ்டி கார்டு பயன்படுத்தி கொள்ளலாம்.
டிஸ்பிளே, சிப்செட் போலவே கேமராவும் சொல்லிக் கொள்ளும்படியான பீச்சர்களுடன் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 2 டெப்த் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) மற்றும் 16 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. டிஐஎஸ் (DIS), ஸ்ட்ரீட் மோட் (Street Mode) போன்ற ரியல்மியின் பிரத்யேக பீச்சர்கள் கிடைக்கின்றன.
27 நிமிடங்களில் 50 சதவீத சார்ஜ் செய்து கொள்ளும்படி 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SuperVOOC Fast Charging) கிடைக்கிறது. இந்த சார்ஜிங்குடன் டைப்-சி போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி பேக் செய்துள்ளது. 7.97 ஸ்லிம் பாடி மற்றும் பீனிக்ஸ் டெக்ச்சர் டிசைனில் பீனிக்ஸ் ரெட் (Phoenix Red) மற்றும் பீகாக் கிரீன் (Peacock Green) ஆகிய கலர்களில் கிடைக்கிறது.
ரியல்மி பி1 5ஜி பிளிப்கார்ட் டிஸ்கவுண்ட் (Realme P1 5G Flipkart Discount): இந்த பி1 5ஜி போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.15,999ஆக இருக்கிறது. இருப்பினும், பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு இல்லாமலேயே ரூ.14,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. ரூ.8,800 எக்ஸ்சேஞ்ச் சலுகையும் இருக்கிறது.


Click it and Unblock the Notifications