குறைந்த விலையில் ரியல்மி 5ஜி போனை வாங்க சரியான நேரம்.. AMOLED டிஸ்பிளே.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?
ரியல்மி பி1 5ஜி (Realme P1 5G) ஸ்மார்ட்போன் ஆனது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த போன் 50எம்பி கேமரா, டைமன்சிட்டி சிப்செட், ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது ரியல்மி பி1 5ஜி போனுக்கு வழங்கப்பட்ட தள்ளுபடி மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
பிளிப்கார்ட் தளத்தில் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி பி1 5ஜி போனுக்கு 42 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு 12,000 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

ரியல்மி பி1 5ஜி அம்சங்கள் (Realme P1 5G Specifications): 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா கொண்டுள்ளது ரியல்மி பி1 5ஜி போன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டு வெளிவந்துள்ளது இந்த போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான படங்களை எடுக்க முடியும்.
இதுதவிர நைட் மோட் (Night Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), ஸ்ட்ரீட் மோட் (Street Mode) போன்ற போட்டோகிராபி பீச்சர்கள் கொண்டுள்ளது இந்த ரியல்மி பி1 5ஜி ஸ்மார்ட்போன். டூயல் வியூ-வீடியோ (Dual-view Video), ஃபிலிம் மோட் (Film Mode), டில்ட் ஸ்விப்ட் (Tift Shift) போன்ற வீடியோ பீச்சர்கள் இந்த போனில் உள்ளன.
6.67 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது ரியல்மி பி1 5ஜி போன். 2400 ×1080 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் ரெயின் வாட்டர் ஸ்மார்ட் டச் (Rainwater Smart Touch) சப்போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.
தரமான ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7050 6nm)சிப்செட் கொண்டுள்ளது இந்த ரியல்மி பி1 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் ரியல்மி யுஐ 5.0 (realme UI 5.0)சார்ந்த ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது. குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரியல்மி நிறுவனம்.
அதுவும் 5000mAh பேட்டரி உடன் இந்த ரியல்மி பி1 5ஜி போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. குறிப்பாக இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
IP54 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் இந்த ரியல்மி பி1 5ஜி போன் வெளிவந்துள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








