பிளிப்கார்ட் தீபாவளி ஆபர்.. கம்மி விலையில் AMOLED டிஸ்பிளே கொண்ட ரியல்மி 5ஜி போன்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் ரியல்மி பி1 5ஜி (Realme P1 5G) ஸ்மார்ட்போனுக்கும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. டைமன்சிட்டி சிப்செட், 50எம்பி டூயல் ரியர் கேமராக்கள், அமோலெட் டிஸ்பிளே உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த ரியல்மி போன் வெளிவந்தது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி பி1 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 33 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.13,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது. ஆகவே இந்த போனை கம்மி விலையில் வாங்விட முடியும்.

ரியல்மி பி1 5ஜி அம்சங்கள் (Realme P1 5G Specifications): தரமான ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7050 6nm)சிப்செட் கொண்டுள்ளது இந்த ரியல்மி பி1 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் ரியல்மி யுஐ 5.0 (realme UI 5.0)சார்ந்த ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது. குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரியல்மி நிறுவனம்.
ரியல்மி பி1 5ஜி போன் 6.67 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. 2400 ×1080 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் ரெயின் வாட்டர் ஸ்மார்ட் டச் (Rainwater Smart Touch) சப்போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.
அதேபோல் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கொண்டுள்ளது ரியல்மி பி1 5ஜி போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டு வெளிவந்துள்ளது இந்த போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான படங்களை எடுக்க முடியும்.
நைட் மோட் (Night Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), ஸ்ட்ரீட் மோட் (Street Mode) போன்ற போட்டோகிராபி பீச்சர்கள் கொண்டுள்ளது இந்த ரியல்மி பி1 5ஜி ஸ்மார்ட்போன். டூயல் வியூ-வீடியோ (Dual-view Video), ஃபிலிம் மோட் (Film Mode), டில்ட் ஸ்விப்ட் (Tift Shift) போன்ற வீடியோ பீச்சர்கள் இந்த போனில் உள்ளன.
அதுவும் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த போன். பின்பு மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே 3டி ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (In-display 3D Fingerprint Scanner) கொண்டிருக்கிறது ரியல்மி பி1 5ஜி ஸ்மார்ட்போன்.
IP54 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் இந்த ரியல்மி பி1 5ஜி போன் வெளிவந்துள்ளது. பீனிக்ஸ் ரெட் (Phoenix Red) மற்றும் பீகாக் கிரீன் (Peacock Green) நிறங்களில் இந்த போனை வாங்கலாம்.
இந்த ரியல்மி பி1 5ஜி போன் 5000mAh பேட்டரி உடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேசமயம் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. குறிப்பாக இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.


Click it and Unblock the Notifications








