OFFER அள்ளுது, ORDER தூக்குது! முழுசா ரூ.4000 விலை குறைப்பு.. 5 Realme போன்கள் மீது அபார தள்ளுபடி! டிச.10 வரை!
ரியல்மி (Realme) நிறுவனம் சத்தமில்லாமல் ஒரு சிறப்பு விற்பனையை நடத்தி வருகிறது. தனது நார்சோ சீரிஸின் (Narzo Series) கீழ் "தாறுமாறாக" விற்பனை சந்தித்த.. 5 பெஸ்ட் செல்லிங் ஸ்மார்ட்போன்கள் (Best Selling Smartphones) மீது ரூ.4000 வரையிலான தள்ளுபடியை அறிவித்துள்ளது.
ரியல்மி பெஸ்ட் செல்லிங் செலப்ரேஷன் (Realme Best Selling Celebration) என்கிற பெயரின் கீழ் நடக்கும் இந்த சிறப்பு விற்பனையானது, கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு தொடங்கியது. இது வருகிற டிசம்பர் 10 ஆம் தேதி வரை நடக்குமென்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

சுவாரசியமாக இந்த சிறப்பு விற்பனையின் கீழ் கிடைக்கும் சலுகைகள், ரியல்மி நிறுவனத்தின் அதிகாரபூர்வ வலைத்தளமான (Realme Official Website) ரியல்மி.காமில் (Realme.com) மட்டுமின்றி, பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான அமேசான் இந்தியா (Amazon.in) வழியாகவும் அணுக கிடைக்கிறது. என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மீது எவ்வளவு தள்ளுபடி கிடைக்கிறது? இதோ விவரங்கள்:
01. ரியல்மி நார்சோ 60 ப்ரோ 5ஜி (Realme Narzo 60 Pro 5G): இந்த ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 1டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் மீது ரூ.2,000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இது ரூ.29,999 க்கு பதிலாக ரூ.27,999 க்கு வாங்க கிடைக்கிறது.

இதே போல ரியல்மி நார்சோ 60 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 12ஜிபி + 256ஜிபி ஆப்ஷன் மீதும் ரூ.2000 தள்ளுபடி கிடைக்கிறது. இது ரூ.26,999 க்கு பதிலாக ரூ.24,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே ஸ்மார்ட்போனின் 8ஜிபி + 128ஜிபி ஆப்ஷன் மீது ரூ.4,000 தள்ளுபடி கிடைக்கிறது. இது ரூ.23,999 க்கு பதிலாக ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது.
02. ரியல்மி நார்சோ 60 5ஜி (Realme Narzo 60 5G): இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் மீது ரூ.2,000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இது ரூ.17,999 க்கு பதிலாக ரூ.15,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதே போல 8ஜிபி + 256ஜிபி ஆப்ஷன் மீதும் ரூ.2000 தள்ளுபடி கிடைக்கிறது. இது ரூ.19,999 க்கு பதிலாக ரூ.17,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

03. ரியல்மி நார்சோ 60 ப்ரோ 5ஜி (Realme Narzo 60x 5G): இந்த ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் மீது ரூ.1,000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இது ரூ.14,499 க்கு பதிலாக ரூ.13,499 க்கு வாங்க கிடைக்கிறது. இதே போல 4ஜிபி + 128ஜிபி ஆப்ஷன் மீது ரூ.750 தள்ளுபடி கிடைக்கிறது. இது ரூ.12,999 க்கு பதிலாக ரூ.12,249 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
04. ரியல்மி நார்சோ என்55 (Realme Narzo N55): இந்த ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் மீது ரூ.3,000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இது ரூ.12,999 க்கு பதிலாக ரூ.9,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதே போல 4ஜிபி + 64ஜிபி ஆப்ஷன் மீது ரூ.750 தள்ளுபடி கிடைக்கிறது. இது ரூ.8,999 க்கு பதிலாக ரூ.8,249 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

05. ரியல்மி நார்சோ என்53 (Realme Narzo N53): இந்த ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் மீது எந் தள்ளுபடியும் அறிவிக்கப்படவில்லை. இது இன்னமும் ரூ.10,999 க்கு தான் வாங்க கிடைக்கிறது. ஆனால் இதே ஸ்மார்ட்போனின் 8ஜிபி + 128ஜிபி ஆப்ஷன் மீது ரூ.1050 தள்ளுபடி கிடைக்கிறது. தற்போது இது ரூ.11,999 க்கு பதிலாக ரூ.10,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








