ரூ.3000 கொடுத்து ஆஃப் பண்ண பார்க்கும் Realme.. லேட்டஸ்ட் போனை வாங்கிய கஸ்டமர்கள் கடுப்பு.. ஜன.21 வரை டைம்!
ஒரு குறிப்பிட்ட ரியல்மி ஸ்மார்ட்போனை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு ரூ.3000 கூப்பன் (Rs.3000 Coupon) கொடுத்து சமாதானம் செய்யும் அளவிற்கு ரியல்மி (Realme) நிறுவனம் ஒரு வேலையை பார்த்துள்ளது. அது என்ன வேலை? அது என்ன ஸ்மார்ட்போன்? அதை வாங்கிய கஸ்டமர்கள் கடுப்பாக என்ன காரணம்? ரூ.3000 கூப்பனை வாங்குவது எப்படி? இதோ விவரங்கள்:
ரியல்மி நிறுவனம் அதன் லேட்டஸ்ட் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் ஒன்றான ரியல்மி ஜிடி 7 ப்ரோ (Realme GT 7 Pro) ஸ்மார்ட்போனை வாங்கிய கஸ்டமர்களுக்கு காம்பென்ஸேஷன் பிளானை (Compensation Plan) அறிவித்துள்ளது. நினைவூட்டும் வண்ணம் இந்த ஸ்மார்ட்போன் கடந்த நவம்பர் 30, 2024 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

தற்போது இந்த ஸ்மார்ட்போன் பல்வேறு இ-காமர்ஸ் தளங்களில் நடந்து வரும் 2025 குடியரசு தின விற்பனையின் போது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது; அதாவது அதன் அசல் அறிமுக விலை குறைக்கப்பட்டுள்ளது. இது ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் எர்லி பையர்களை (Early Buyers) ஏமாற்றமடைய செய்துள்ளது.
அவர்களின் கவலையை நிவர்த்தி செய்யும் நோக்கத்தின் கீழ் தகுதியான வாடிக்கையாளர்களுக்கான இழப்பீட்டு திட்டத்தை ரியல்மி அறிவித்து உள்ளது. இந்த இழப்பீடு திட்டத்தின் மூலம் ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஸ்மார்ட்போனை வாங்குபவர்கள் அனைவருக்கும் நிலையான மதிப்பு (Consistent value) உறுதி செய்யப்[படும் என்று ரியல்மி நம்புகிறது.
ரூ.3000 கூப்பனை வழங்கும் இழப்பீட்டு திட்டத்திற்கான தகுதி மற்றும் செயல்முறை: ரியல்மியின் அதிகாரப்பூர்வ இணையதளம், அமேசான் (Amazon) அல்லது ஆஃப்லைன் ஸ்டோர்கள் வழியாக ஜனவரி 13, 2025 க்கு முன் ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஸ்மார்ட்போனை வாங்கி, அதை ஆக்டிவேட் செய்து இருக்க வேண்டும்.
ரியல்மி இணையதளம் வழியாக ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஸ்மார்ட்போனை வாங்கிய வாடிக்கையாளர்கள் ஆர்டர் நம்பர் மற்றும் ஐஎம்இஐ (IMEI) நம்பரை வழங்க வேண்டியிருக்கும் அமேசான் அல்லது ஆப்லைன் வழியாக ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஸ்மார்ட்போனை கொள்முதல் செய்தவர்கள் வாங்கியதற்கான ஆதாரம் மற்றும் ஐஎம்இஐ நம்பரை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.
தகுதியான வாடிக்கையாளர்கள் ஜனவரி 13 மற்றும் ஜனவரி 21, 2025 க்குள் இழப்பீட்டு கோரிக்கைகளை சமர்ப்பிக்கலாம். இதன்கீழ் தகுதியுள்ள வாடிக்கையாளர்கள் ரூ.3,000 கூப்பனை பெறுவார்கள். இது ஜனவரி 24, 2025 க்குள்குறிப்பிட்ட அவர்களின் ரியல்மி அதிகாரப்பூர்வ வெப்சைட் அக்கவுண்ட்டில் வரவு வைக்கப்படும்.
ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மீது கிடைக்கும் குடியரசு தின விற்பனை தள்ளுபடிகள்: 2025 குடியரசு தின விற்பனையின் கீழ் ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் 16ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷன் மீது ரூ.6,000 வங்கி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் மீது ரூ.5,000 வங்கி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், டால்பி விஷன் (Dolby Vision), DCI-P3 கலர் கேமட் மற்றும் 6000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.78-இன்ச் LTPO Eco² OLED பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
சிப்செட்டை பொறுத்தவரை இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 3என்எம் சிப்செட் (Qualcomm Snapdragon 8 Elite 3nm SoC) மூலம் இயக்கப்படுகிறது. உயர் செயல்திறன் மிக்க மல்டிடாஸ்கிங் மற்றும் சிறந்த கேமிங்கிற்காக இது 12ஜிபி அல்லது 16ஜிபி LPDDR5X ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை இது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் OIS ஆதரவு உடனான 50MP சோனி IMX906 ப்ரைமரி கேமரா + 8MP அல்ட்ராவைடு கேமரா + 50MP டெலிஃபோட்டோ கேமரா உள்ளன. முன்பக்கத்தில் 16MP செல்பீ கேமரா உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை இது 120W பாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5800mAh பேட்டரியை பேக் செய்கிறது.


Click it and Unblock the Notifications








