Home
Mobile

மிரளுது பட்ஜெட்.. 6300mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. 90Hz டிஸ்பிளே.. புது Realme போன்.. எந்த மாடல்?

ரியல்மி நிறுவனத்தின் மலிவு விலை ஸ்மார்ட்போன் மாடலாக ரியல்மி நோட் 80 (Realme Note 80) ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. பேட்டரி, டிஸ்பிளே, கேமரா மற்றும் டிசைன் உள்ளிட்ட விவரங்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன. இந்த ரியல்மி நோட் 80 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ரியல்மி நோட் 80 அம்சங்கள் (Realme Note 80 Specifications): 6.74 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த ரியல்மி நோட் 80 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 563 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. வெட் ஹேண்ட் டச் (Wet Hand Touch) சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது.

மிரளுது பட்ஜெட்.. 6300mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. 90Hz டிஸ்பிளே!

மேலும், ஆர்மர்ஷெல் புரொடெக்சன் (ArmorShell Protection) கிடைத்துள்ளது. 1.8 மீட்டர்கள் டிராப் ரெசிஸ்டன்ஸ் கொடுத்து உள்ளது. IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கிடைக்கிறது. ஆக்டா கோர் சிப்செட் கிடைக்க உள்ளது. யுனிசோக் சிப்செட்டை எதிர்பார்க்கலாம். 15W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6300mAh பேட்டரி கிடைத்துள்ளது.

4 வருடங்களுக்கு பேட்டரி ஹெல்த் கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் 7.94 எம்எம் தடிமன் மற்றும் 197 கிராம் எடை கொடுக்கப்பட்டு உள்ளது. 8 எம்பி மெயின் கேமரா மற்றும் செல்பீ, வீடியோ கால்களுக்காக 5 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. ஆப்ஜெக்ட் ரீமூவல் (Object Removal) மற்றும் பேஸ் என்ஹான்ஸ்மெண்ட் (Face Enhancement) கிடைக்கிறது.

இதுபோக பேக்கிரவுண்ட் கட்அவுட்கள் (Background Cutouts) கிடைக்கின்றன. கிளாசியர் ப்ளூ (Glacier Blue) மற்றும் ஸ்டார்ம் பிளாக் (Storm Black) கலர்களில் கிடைக்க உள்ளது. இந்த விவரங்கள் மட்டுமே கசிந்துள்ளன. அதேபோல பட்ஜெட் விவரங்களும் தெரியவில்லை. இருப்பினும், மார்ச் 5ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை தெரிந்து கொள்வதற்கு முந்தைய மாடலான ரியல்மி நோட் 70 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை பார்க்க வேண்டும். ஆக்டா கோர் யுனிசோக் டி7250 12என்எம் (Octa Core UNISOC T7250 12nm) சிப்செட் மற்றும் மாலி ஜி57 எம்பி1 ஜிபியு (Mali G57 MP1 GPU) இந்த ரியல்மி நோட் 70 ஸ்மார்ட்போனில் கிடைத்துள்ளது.

6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்க உள்ளது. 6.74 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. மேலும், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 180Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. 6300mAh பேட்டரி மற்றும் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட்டு உள்ளது.

ஓம்னிவிஷன் ஓவி13பி10 (OV13B10) சென்சாருடன் 13 எம்பி ரியர் கேமரா கிடைக்கிறது. 5 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. டூயல் வியூ வீடியோ (Dual View Video) போன்ற வீடியோ பீச்சர்கள் மற்றும் போட்டோ மோட் (Photo Mode), நைட் மோட் (Night Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode) உள்ளிட்ட போட்டோகிராபி பீச்சர்களும் கொடுக்கப்பட்டு உள்ளன.

இந்த ரியல்மி நோட் 70 ஸ்மார்ட்போன் ரூ.8,000 பட்ஜெட்டுக்குள் வெளியாகியது. ஆகவே, ரியல்மி நோட் 80 ஸ்மார்ட்போனை ரூ.10,000 பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம். கேமரா பீச்சர்கள் பெரிதாக பார்க்க முடியவில்லை. ஆகவே, மலிவு விலைக்கு வெளியாகும் என்பதில் சந்தேகமில்லை. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு வாரங்களில் எதிர்பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
Realme Note 80 With 6300mAh Battery 15W Charging Leaked Ahead Of Launch Expected Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X