அடுத்த Realme போன் ரெடி.. 50எம்பி கேமரா.. 6000mAh பேட்டரி. 128ஜிபி மெமரி.. ஐபி64 ரேட்டிங்.. எந்த மாடல்?
ரியல்மி நிறுவனம் விரைவில் உலக சந்தையில் ரியல்மி நோட் 70டி (Realme Note 70T) எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த போன் AMOLED டிஸ்பிளே, 50எம்பி கேமரா, ஐபி64 ரேட்டிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவரும். தற்போது ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ரியல்மி நோட் 70டி அம்சங்கள் (Realme Note 70T specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய ரியல்மி நோட் 70டி போன் அறிமுகமாகும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தரமான யுனிசாக் டி7250 (Unisoc T7250) சிப்செட் உடன் இந்த ரியல்மி நோட் 70டி போன் அறிமுகமாகும். அதேபோல் ரியல்மி யுஐ (Realme UI) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த புதிய ரியல்மி போன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. IP64 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust and splash resistant) ஆதரவும் ரியல்மி நோட் 70டி ஸ்மார்ட்போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
50எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ரியல்மி நோட் 70டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அட்டகாசமான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
6000mAh பேட்டரி உடன் ரியல்மி நோட் 70டி ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 15w ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. அதேபோல் இந்த போனில் மேம்பட்ட ஏஐ அம்சங்கள் உள்ளன.
சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) ஆதரவு கொண்டுள்ளது ரியல்மி நோட் 70டி ஸ்மார்ட்போன். மேலும் டூயல் சிம், புளூடூத் 5.4, யுஎஸ்பி டைப்-சி 3.5எம்எம் ஹெட்போன் ஜாக், வைஃபை 6 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
கோல்டு மற்றும் பிளாக் நிறங்களில் இந்த ரியல்மி நோட் 70டி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் இந்தபோனின் எடை 185 கிராம் ஆகும். குறிப்பாக அனைத்து சிறப்பான அம்சங்களுடன் புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் ஆனது பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
photo credit: xpertpick


Click it and Unblock the Notifications








