மிரண்டு போன மார்க்கெட்.. 6000mAh பேட்டரி.. 13எம்பி கேமரா.. அறிமுகமானது புதிய ரியல்மி போன்.. எந்த மாடல்?
ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி நோட் 70டி (Realme Note 70T) ஸ்மார்ட்போனை தற்போது ஐரோப்பாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ஆனது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த ரியல்மி ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விலை குறித்த தகவல்களைப் பார்க்கலாம்.
ரியல்மி நோட் 70டி அம்சங்கள் (Realme Note 70T specifications): 6.74-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய ரியல்மி நோட் 70டி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது.குறிப்பாக இந்த டிஸ்பிளேவில் 720 x 1600 பிக்சல்ஸ், 563 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் யுனிசாக் டி7250 சிப்செட் (Unisoc T7250 chipset) உடன் இந்த புதிய ரியல்மி நோட் 70டி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். குறிப்பாக இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் இந்த போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
13எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த புதிய ரியல்மி நோட் 70டி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். எனேவு இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
Realme UI 5 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதள வசதியுடன் இந்த ரியல்மி நோட் 70டி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு அண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) கொண்டுள்ளது இந்த ரியல் போன்.
டூயல் சிம், 4ஜி வோல்ட்இ, வைஃபை 5, புளூடூத் 5.2, ஜிபிஎஸ், என்எஃப்சி, ஒரு யூ.எஸ்.பி-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ரியல்மி ஸ்மார்ட்போனில் உள்ளது. மேலும் MIL-STD 810H சான்றிதழ் பெற்றுள்ளது ரியல்மி நோட் 70டி போன். ஐீ54 ரேட்டிங் உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் பிளாக், கோல்டு நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.
6000எம்ஏஎச் பேட்டரி உடன் இந்த புதிய ரியல்மி போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக ரியல்மி நோட் 70டி ஸ்மார்ட்போனின் விலை 89 euros (இந்திய மதிப்பில் ரூ.8,990) ஆக உள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








