தூக்குங்கடா அந்த தங்கத்த.. வெறும் ரூ.10000 பட்ஜெட்ல 24GB ரேம்.. 2TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
இந்திய ஸ்மார்ட்போன் பிரியர்களை அறக்க பறக்க செய்யும் பட்ஜெட்டில் 24 ஜிபி ரேம், 2 டிபி மெமரி, எச்டிபிளஸ் டிஸ்பிளே, டூயல் ரியர் கேமரா சிஸ்டம், 10W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி மற்றும் IP64 ரெசிஸ்டன்ட் போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், பிரீமியம் லுக் கொடுக்கும் டிசைனில் ரியல்மி நோட் 60 (Realme Note 60) போன் வெளியாகி இருக்கிறது. இந்த ரியல்மி போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ரியல்மி நோட் 60 அம்சங்கள் (Realme Note 60 Specifications): இந்த ரியல்மி போனில் 6.74 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிபிளஸ் (HD+) ரொசொலூஷன் மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. மேலும், 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 560 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

இந்த ரியல்மி பட்ஜெட்டில் வெளியாகி இருந்தும், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்டிருக்கிறது. பட்ஜெட் பர்ஃபாமென்ஸ் கொண்ட ஆக்டா கோர் யுனிசோக் டி612 12என்எம் (Octa Core UNISOC T612 12nm) சிப்செட் மற்றும் மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. மூன்று மெமரி மாடல்களில் கிடைக்க இருக்கின்றன.
ஆகவே, 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. இந்த ரேம் மாடல்களில் விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) சப்போர்ட் வருகிறது. ஆகவே, 8 ஜிபி ரேம் மாடலில் 16 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட் செக்மெண்ட்டில் 24 ஜிபி ரேம் கொண்ட மாடலாக இந்த போன் இருக்கிறது. மேலும், 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) பயன்படுத்தி கொள்ளலாம். ரியல்மி யுஐ (realme UI) சப்போர்ட் வருகிறது. டூயல் சிம் சிலாட் (Dual SIM Slot), மைக்ரோஎஸ்டி சிலாட் (microSD Slot) மற்றும் டைப்-சி போர்ட் (Type-C Port) வருகிறது.

இந்த ரியல்மி நோட் 60 போனில் 32 எம்பி மெயின் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Real Camera System) வருகிறது. அதேபோல 5 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. பட்ஜெட் போன்களில் வரும் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) வருகிறது.
அதேபோல பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom-ported Speaker) உள்ளது. இந்த பட்ஜெட்டிலும் IP64 டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் வருகிறது. இந்த ரியல்மி நோட் 60 மாடலில் 10W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரியுடன் 187 கிராம் எடை மற்றும் 7.84 மிமீ தடிமன் கொண்டிருக்கிறது.
ரியல்மி நோட் 60 விலை (Realme Note 60 Price): இந்த போனின் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.7,580 ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.8,665 ஆகவும் இருக்கிறது. அதேபோல 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.10,830 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இப்போது, இந்தோனேசியா மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. இதே பட்ஜெட்டில் அடுத்த சில வாரங்களில் இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. மார்பிள் பிளாஸ் (Marble Black), வோயேஜர் ப்ளூ (Voyager Blue) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். ரூ.10,000 பட்ஜெட்டில் 24 ஜிபி ரேம் கொண்ட மாடலை வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








