அசூர விற்பனை.. வெறும் ரூ.5,325 போதும்.. 8GB ரேம்.. 2TB மெமரி.. 5000mAh பேட்டரி .. எந்த மாடல்?
ரியல்மி பிரியர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் பிரியர்களும் மிரளும்படி வெறும் ரூ.6,000 பட்ஜெட்டுக்குள் எல்சிடி டிஸ்பிளே, 2டிபி மெமரி, ஆண்ட்ராய்டு 13, 10W சார்ஜிங், 5,000mAh பேட்டரி போன்ற அம்சங்களுடன் ரியல்மி நோட் 50 (Realme Note 50) போன் வந்திருக்கிறது.
ரியல்மி நோட் 50 அம்சங்கள் (Realme Note 50 Specifications): இந்த ரியல்மி போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் யுனிசோக் டி612 12என்எம் (Octa Core UNISOC T612 12nm) சிப்செட் வருகிறது. அதோடு ரியல்மி யுஐ டி எடிஷன் (realme UI T Edition) சப்போர்ட் வருகிறது.

90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.74 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 560 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.
இந்த ரியல்மி நோட் 50 போனில் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல், 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் மற்றும் 4 ஜிபிக்கான டைனாமிக் ரேம் (Dynamic RAM) கொண்டுள்ளது.
டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) வருகிறது. அதேபோல மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் இடம் பெற்றுள்ளது. இந்த போனில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. ஆகவே, 13 எம்பி மெயின் கேமரா + பி&டபுள்யூ டெப்த் சென்சார் (B&W Depth Sensor) வருகிறது.

அதோடு எல்இடி பிளாஷ் கொண்டுள்ளது. 5 எம்பி செல்பீ கேமரா வருகிறது. IP54 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்டுள்ளது. இந்த போனில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), 3.5 மிமீ ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom-ported Speakers) வருகிறது.
10W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) மற்றும் யுஎஸ்பி சி (USB C) போர்ட் சப்போர்ட் கொண்ட 5,000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரியோடு 186 கிராம் எடை கொண்டிருக்கிறது. அதேபோல 7.99 மிமீ தடிமன் வருகிறது. டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802 (Wi-Fi 802) சப்போர்ட் உள்ளது.
அதோடு ப்ளூடூத் 5.0 (Bluetooth 5) மற்றும் ஜிபிஎஸ் (GPS) ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன. இந்த ரியல்மி நோட் மாடலானது, பிலிப்பைன்ஸ் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டு, விற்பனைக்கு வந்துவிட்டது. மிட்நைட் பிளாக் (Midnight Black) மற்றும் ஸ்கை ப்ளூ (Sky Blue) ஆகிய 2 கலர்கள் விற்பனைக்கு கிடைக்கிறது.

இந்த ரியல்மி நோட் 50 போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ. 5,325ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு மலிவான விலைக்கு பிரீமியம் டிசைனில் கிடைப்பதால், அசூர வரவேற்பு பெற்று வருகிறது. அடுத்த சில வாரங்களில் அடுத்தடுத்த நாடுகளில் வெளியாகலாம்.


Click it and Unblock the Notifications








