மிரளுது பட்ஜெட்.. வெறும் ரூ.5,350 போதும்.. 8GB ரேம்.. 2TB மெமரி.. 10W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
ரியல்மி பிரியர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் பிரியர்களும் அதிரும்படி வெறும் ரூ.5,350 விலையில் 8ஜிபி ரேம், எல்சிடி டிஸ்பிளே, 10W ஃபாஸ்ட் சார்ஜிங், 5,000mAh பேட்டரி போன்ற அம்சங்கள் மட்டுமல்லாமல், பிரீமியம் டிசைனோடும் ரியல்மி நோட் 50 போன் அறிமுகமாகி இருக்கிறது.
ரியல்மி நோட் 50 அம்சங்கள் (Realme Note 50 Specifications): இந்த ரியல்மி போனில் 6.74 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே மாடலாகும்.

இந்த டிஸ்பிளேவில் 180Hz டச் சாம்பிளிங் ரேட் (Touch Sampling Rate) மற்றும் 260 பிபிஐ பிக்சல் டென்சிட்டி (Pixel Density) வருகிறது. அதோடு 560 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளது. இந்த போனில் IP54 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது.
இந்த ரியல்மி போனானது, 7.99 மிமீ தடிமன் மற்றும் 186 கிராம் எடை மட்டுமே கொண்டிருக்கிறது. ஆகவே, ஸ்லிம் டிசைனில் பின்னியெடுக்கிறது. ஆண்ட்ராய்டு 13 கோ ஓஎஸ் (Android 13 Go OS) கொண்டிருக்கிறது. அதேபோல, ரியல்மி யுஐ டி எடிஷன் (realme UI T Edition) சப்போர்ட் கொண்டுள்ளது.
ஆக்டா-கோர் யுனிசோக் டி612 12என்எம் (Octa-Core UNISOC T612 12nm) சிப்செட் வருகிறது. இந்த ரியல்மி நோட் 50 போனில் 4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் வருகிறது. ஆகவே, 8 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வர இருக்கிறது.
அதோடு 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் வருகிறது. இந்த போனில் 13 எம்பி மெயின் கேமரா + மோனோகுரோம் சென்சார் (Monochrome Sensor) கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. அதோடு எல்இடி பிளாஷ் இடம் பெற்றுள்ளது.
அதேபோல 5 எம்பி செல்பீ கேமரா கொண்டிருக்கிறது. இந்த ரியல்மி நோட் 50 போனில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வருகிறது. அதோடு 3.5 மிமீ ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom Ported Speakers) வருகின்றன.
அதேபோல எஸ்டி கார்டு சிலாட் (SD Card Slot) மற்றும் டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) கொண்டிருக்கிறது. 10W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கொண்ட 5,000mAh பேட்டரி வருகிறது. இதற்கு யுஎஸ்பி சி (USB C) போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ரியல்மி போன் 4ஜி வேரியண்ட் என்பதால், டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.0 (Bluetooth 5) மற்றும் ஜிபிஎஸ் (GPS) ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.5,350ஆக இருக்கிறது.
இப்போது, பிலிப்பைன்ஸ் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அடுத்தடுத்த நாடுகளில் வெளியாகிறது. இந்த போனில் மிட்நைட் பிளாக் (Midnight Black) மற்றும் ஸ்கை ப்ளூ (Sky Blue) ஆகிய 2 கலர்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன.
இதேபோன்ற டிசைனில் ரியர்மி சி51 போன் இந்தியாவில் விற்பனையாகிறது. ஆனால், அதில் 50 எம்பி கேமரா வருகிறது. அதேபோல விலையும் ரூ.9,000 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, இந்த ரியல்மி நோட் 50 போன் இந்தியாவில் விற்பனைக்கு வந்தால், கம்மி விலை காரணமாக வரவேற்பு பெறலாம்.


Click it and Unblock the Notifications








