Home
Mobile

மார்க்கெட்டே திணறப்போகுது.. 6.7-இன்ச் டிஸ்பிளே.. 50எம்பி கேமரா.. மலிவு விலையில் ரியல்மி போன்.. எந்த மாடல்?

ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி நோட் 50 ஸ்மார்ட்போனை வரும் ஜனவரி 24-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த ரியல்மி ஸ்மார்ட்போன் ஆனது தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ரியல்மி நோட் 50 ஸ்மார்ட்போன் ஆனது ஜனவரி 24-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த போன் எந்த நாட்டில் அறிமுகமாகும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. குறிப்பாக இந்த போன் கம்மி விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

மார்க்கெட்டே திணறப்போகுது..  மலிவு விலையில் ரியல்மி போன்.. எந்த மாடல்?

ரியல்மி நோட் 50 அம்சங்கள்(Realme Note 50 specifications): 6.7-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த ரியல்மி நோட் 50 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் மீடியாடெக் டைமன்சிட்டி சிப்செட் வசதியுடன் இந்த ரியல்மி நோட் 50 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனில் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதேபோல் ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த ரியல்மி போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

குறிப்பாக 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ரியல்மி நோட் 50 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ரியல்மி நோட் 50 ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்ட 50எம்பி டூயல் ரியர் கேமரா உடன் இந்த ரியல்மி நோட் 50 ஸ்மார்ட்போன் அறிமுகாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

அதேபோல் IP54 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust And Water Resistant)வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரியல்மி போன். மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர்(Side-mounted Fingerprint Scanner)வசதியும் இந்த போனில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மார்க்கெட்டே திணறப்போகுது..  மலிவு விலையில் ரியல்மி போன்.. எந்த மாடல்?

5000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த ரியல்மி நோட் 50 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரி சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் 5ஜி, வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.

சமீபத்தில் அறிமுகமான ரெட்மி 12 5ஜி, போக்கோ எம்6 5ஜி உள்ளிட்ட போன்களுக்கு போட்டியாகத் தான் ரியல்மி நோட் 50 ஸ்மார்ட்போன் கம்மி விலையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது இந்த ரியல்மி போன் ரூ.10,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த ரியல்மி நோட் 50 போனுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme Note 50 will be launched on January 24: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X