Home
Mobile

கண்ண மூடிக்கிட்டு வாங்கும் விலை.. 50MP Periscope கேமரா, 144Hz டிஸ்பிளே, 100W சார்ஜிங், 16GB ரேம்! என்ன மாடல்?

பெரும்பாலான நிறுவனங்கள் தத்தம் புதிய ஸ்மார்ட்போன்களை 2024 ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்யவுள்ளன. அந்த வரிசையில் ரியல்மி (Realme) நிறுவனமும் சேர்ந்துள்ளது. ரியல்மி அப்படி என்ன ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது? அதன் விலை என்ன? அம்சங்கள் என்ன? இதோ விவரங்கள்:

ரியல்மி நிறுவனமானது, ரியல்மி 12 ப்ரோ சீரீஸ் (Realme 12 Pro Series) ஸ்மார்ட்போன்களை அல்லது ரியல்மி ஜிடி 5 ப்ரோ (Realme GT 5 Pro), இவ்விரண்டில் ஏதோவொன்று இந்த ஜனவரி மாதமே இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்த சரியான தகவல் ஜன.3 ஆம் தேதியன்று அறிவிக்கப்படும் என்று போக்கோ இந்தியா நிறுவனம் கூறியுள்ளது.

Realme New Smartphone: கண்ண மூடிக்கிட்டு வாங்கும் விலை.. என்ன மாடல்?

ஒருவேளை ரியல்மி ஜிடி 5 ப்ரோ அறிமுகமானால் அது என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகமாகி விட்டதால், இதன் அம்சங்கள் மற்றும் விலை நிர்ணயம் குறித்து எங்களிடம் எந்த குழப்பமும் இல்லை. இது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான Realme UI 5.0 கொண்டு இயங்குகிறது.

மேலும் இது 144Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.78-இன்ச் 1.5K (1264 x 2780 பிக்சல்ஸ்) AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. ரியல்மியின் இந்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் 4என்எம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்டை பேக் செய்கிறது.

Realme New Smartphone: கண்ண மூடிக்கிட்டு வாங்கும் விலை.. என்ன மாடல்?

கேமராக்களை பொறுத்தவரை, இது ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட்டை கொண்டுள்ளது. அதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவு உடனான 50 மெகாபிக்சல் Sony LYT-808 மெயின் கேமரா உள்ளது. அதனுடன் 50-மெகாபிக்சல் Sony IMX890 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 8-மெகாபிக்சல் Sony IMX355-டிகிரி 11-டிகிரி வைட் ஆங்கிள் சென்சாரும் உள்ளன. முன்பக்கத்தில் 32-மெகாபிக்சல் சோனி IMX615 செல்பீ கேமரா உள்ளது.

டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஹை-ரெஸ் (Hi-Res) மற்றும் டால்பி ஆடியோ சான்றிதழ் உடன் வரும் ரியல்மி ஜிடி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடனான 5,400mAh பேட்டரியுடன் வருகிறது.

Realme New Smartphone: கண்ண மூடிக்கிட்டு வாங்கும் விலை.. என்ன மாடல்?

என்ன விலைக்கு வரும்? சீனவில் இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.40,000 க்கும், 16ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.42,000 க்கும், 16ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷன் ரூ. 45,000 க்கும், 16ஜிபி ரேம் + 1டிபி ஆப்ஷன் ரூ.50,000 க்கும் அறிமுகமாகி உள்ளன. இதேபோன்ற விலைகளை நாம் இந்தியாவிலும் எதிர்பார்க்கலாம்.

ஒருவேளை ரியல்மி 12 ப்ரோ சீரீஸ் அறிமுகமானால் அது என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இந்த சீரீஸின் கீழ் ரியல்மி 12 ப்ரோ மற்றும் ரியல்மி 12 ப்ரோ பிளஸ் என மொத்தம் 2 மாடல்கள் அறிமுகமாகும். இரண்டுமே ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் (Snapdragon 7 Gen 3 Chipset) மூலம் இயக்கப்படலாம் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான கர்வ்டு-எட்ஜ் OLED டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம்.

முக்கிய வேறுபாடுகளை பொறுத்தவரை, 12 ப்ரோ மாடலில் 2எக்ஸ் ஆப்டிகல் ஜூமிங்கை வழங்கும் 32 மெகாபிக்சல் IMX709 டெலிஃபோட்டோ கேமரா இடம்பெறும் என்று கூறப்படுகிறது. மறுகையில் உள்ள 12 ப்ரோ பிளஸ் மாடலில் 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 64-மெகாபிக்சல் OMniVision OV64B பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன விலைக்கு வரும்? இந்தியாவில் ரியல்மி 12 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் ரூ.29,999 ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுகையில் உள்ள ரியல்மி 12 ப்ரோ பிளஸ் வேரியண்ட் ஆனது ரூ.35,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம். மேற்கண்ட விலைகளில் சில மாற்றங்கள் இருக்கவும் வாய்ப்புண்டு!

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme New Phone in India Announcing on Jan 3 Realme 12 Pro Series or Realme GT 5 Pro Price Specs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X