Home
Mobile

ஆபர் விலையில் Realme-யின் புது 5G போன்.. 7000mAh பேட்டரி, 80W சார்ஜிங், 50MP AI கேமரா.. எந்த மாடல்?

7000mAh பேட்டரி, 80W பாஸ்ட் சார்ஜிங், 50 மெகாபிக்சல் ஏஐ கேமரா உட்பட பல முக்கிய அம்சங்களுடன் ரியல்மி நிறுவனத்தின் லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போனாக (கடந்த வாரம்) அறிமுகமான ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இன்று (ஆக.25) முதல் விற்பனைக்கு வருகிறது.

ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4,500 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ் உடனான 6.77-இன்ச் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

ஆபர் விலையில் Realme-யின் புது 5G போன்!

சிப்செட்டை பொறுத்தவரை ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது நிறுவனத்தின் ஹைப்பர் விஷன் சிப்புடன் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 (MediaTek Dimensity 7400) சிப்செட்டால் ஆதரிக்கப்படுகிறது. இது 8GB வரையிலான ரேம், 256GB வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜை ஆதரிக்கிறது.

ஓஎஸ்-ஐ பொறுத்தவரை ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ரியல்மி யுஐ 6 ஓஎஸ் கொண்டு இயங்குகிறது. மேலும் இது வெப்ப மேலாண்மைக்காக 7,000 சதுர மிமீ ஏர்ஃப்ளோ விசி கூலிங் சிஸ்டமையும் கொண்டுள்ளது. இதே வீசி கூலிங் சிஸ்டம் ஆனது ப்ரோ வேரியண்ட்டிலும் உள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டரை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 16-மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளது. பல வகையான ஏஐ ஆதரவு அம்சங்களை ஆதரிக்கும் ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஏஐ எடிட் ஜீனி மற்றும் ஏஐ டிராவல் ஸ்னாப் ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவு உடனான 7,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. பெரிய பேட்டரியை கொண்டிருந்தாலும் கூட இது பல்க் ஆன ஸ்மார்ட்போனாக இல்லாமல் 7.58மிமீ என்கிற அளவிலான ஸ்லிம் ஆன டிசைனையே கொண்டுள்ளது.

ரியல்மி பி4 5ஜி விலை, விற்பனை மற்றும் சலுகைகள் குறித்த விவரங்கள்: இந்தியாவில் ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.18,499 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டரோஜ் ஆப்ஷன் ரூ.19,499 க்கும் மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷ ரூ.21,499 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

இன்று (ஆகஸ்ட் 25 ஆம் தேதி) மதியம் 12 மணி முதல், பிரபல இகாமர்ஸ் வலைத்தளம் ஆன பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி இந்தியா வலைத்தளம் மூலம் விற்பனைக்கு வரும் இந்த ஸ்மார்ட்போனின் மீதான அறிமுக சலுகைகளை பொறுத்தவரை, ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளின் கீழ் ரூ.2,500 தள்ளுபடி, ரூ.1,000 எக்ஸ்சேஞ்ச் சலுகையும் பெறலாம்.

நினைவூட்டும் வண்ணம் ரியல்மி ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரியல்மி பி4 ப்ரோ 5ஜி (Realme P4 Pro 5G) மாடலுடன் சேர்ந்து அறிமுகமானது. ப்ரோ மாடலின் விற்பனை ஆகஸ்ட் 27 ஆம் தேதி தொடங்கும். இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.24,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் ரியல்மி பி4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டரோஜ் மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் முறையே ரூ.26,999 மற்றும் ரூ.28,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme New 7000mAh Battery Phone Realme P4 5G India Sale Starting From Today Price Offers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X