Home
Mobile

பொளந்துகட்ட போகும் Realme.. பட்ஜெட் பிரிவில் கர்வ்டு டிஸ்பிளே, 100MP கேமரா, 1TB ஸ்டோரேஜ்.. என்ன மாடல்?

மாதத்திற்கு 4 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் தனது பாணியை, ரியல்மி (Realme) மாற்றிக்கொள்வது போல் தெரியவில்லை. இம்மாத தொடக்கத்தில் ரியல்மி 11 ப்ரோ சீரீஸின் கீழ் 2 புதிய போன்களை அறிமுகம் செய்த இந்நிறுவனம், இம்மாத இறுதியில் மேலும் 2 புதிய மாடல்களை அறிமுகம் செய்யவுள்ளது.

வருகிற ஜூன் 26 ஆம் தேதியன்று ரியல்மியின் பட்ஜெட்-விலை சீரீஸ் ஆன நார்சோ (Narzo) சீரீஸின் கீழ் 2 புதிய மாடல்கள் அறிமுகமாகுமென்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த போன்களின் மாடல் பெயர்களை ரியல்மி இன்னும் வெளியிடவில்லை என்றாலும் கூட, அது ரியல்மி நார்சோ 60 சீரீஸ் (Realme Narzo 60 Series) ஆக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

Realme Narzo 60 சீரீஸ் இந்திய அறிமுக தேதி அறிவிப்பு!

அதாவது ரியல்மி நார்சோ 60 மற்றும் ரியல்மி நார்சோ 60 ப்ரோ ஆகிய இரண்டும் வருகிற ஜூன் 26 இல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம். இதுகுறித்து ரியல்மி வெளியிட்டுள்ள டீசரின் வழியாக, ரியல்மி நார்சோ 60 சீரீஸ் ஆனது இம்மாத தொடக்கத்தில் அறிமுகமான ரியல்மி 11 ப்ரோ சீரீஸில் நாம் பார்த்தே அதே கேமரா மாட்யூலை கொண்டிருக்கும் என்பதை வெளிப்படையாக பார்க்க முடிகிறது.

மற்றொரு டீசரானது, இதில் கர்வ்டு டிஸ்பிளே மற்றும் டிஸ்பிளேவின் மேல் மையத்தில் பஞ்ச்-ஹோல் கட்அவுட் இடம்பெறும் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது. இதன் டிஸ்பிளே அதிக ரெஃப்ரெஷ் ரேட் (Refresh Rate) உடனான அமோஎல்இடி ஆக இருக்குமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் இது 120ஹெர்ட்ஸ் உடனான ஃபுல் எச்டி பிளஸ் ரெசல்யூஷனை கொண்டிருக்கலாம்.

இருப்பினும், இந்த சீரீஸின் ப்ரோ மாடலில் மட்டுமே கர்வ்டு டிஸ்பிளே இடம்பெறுமா அல்லது வெண்ணிலா மாடலான ரியல்மி நார்சோ 60-யிலும் கர்வ்டு டிஸ்பிளே பேக் செய்யப்படுமா என்பது பற்றி எந்த விளக்கமும் இல்லை; பெரும்பாலும் ரியல்மி நார்சோ 60 ப்ரோவில் மட்டுமே கர்வ்டு டிஸ்பிளே இடம்பெறலாம்.

மேலும், இந்த சீரிஸில் 1டிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் (1TB Internal Storage) இடம்பெறும் என்பதும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய ஸ்டோரேஜ் உடன் வருவது, உண்மையிலேயே பட்ஜெட் பிரிவில் ஒரு புரட்சியை கொண்டு வரும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

ரியர் கேமராவை பொறுத்தவரை, நார்சோ 60 ப்ரோவில் 100எம்பி கேமரா இடம்பெறலாம். மறுகையில் உள்ள வெண்ணிலா மாடலில் அதை குறைவான சென்சார் பயன்படுத்தப்படலாம். செல்பீ கேமராவை பொறுத்தவரை ப்ரோ மாடல் ஆனது 16எம்பி சென்சார் உடன் வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர்த்து 2 போன்களும் 1080பி வீடியோக்களை ரெக்கார்ட் செய்யும் ஆதரவுடன் வரலாம்.

இம்மாத தொடக்கத்தில் அறிமுகமான ரியல்மி 11 ப்ரோ சீரீஸை பொறுத்தவரை, ரியல்மி 11 ப்ரோ பிளஸ் ஆனது 200எம்பி மெயின் கேமராவை கொண்ட நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும், அதே நேரத்தில் ரியல்மி 11 ப்ரோ ஆனது 108எம்பி மெயின் கேமராவை கொண்டுள்ளது. இரண்டுமே மீடியாடெக் டைமென்சிட்டி சிப்செட் மூலம் இயக்கப்படுகின்றன.

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, ரியல்மி 11 ப்ரோ மாடலானது ரூ.23,999 க்கும், ரியல்மி 11 ப்ரோ பிளஸ் மாடலானது ரூ.27,999 க்கும் வாங்க கிடைக்கிறது. முதல் நால் விற்பனையிலேயே ரியல்மி 11 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் 60,000 யூனிட்கள் விற்பனையானது என்பதும் இங்கே குறிப்பிடத்தது. இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் (Flipkat) வழியாக விற்பனை செய்யப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme New 5G Phones Realme Narzo 60 Series India Launch on July 26 Check Confirmed Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X