Home
Mobile

வெச்சி செஞ்சிட்டாங்க.. 8000mAh பேட்டரி.. SONY கேமரா.. 120X ஜூமிங்.. 16GB ரேம்.. 1TB மெமரி.. எந்த மாடல்?

ரியல்மி நிறுவனத்தின் பிரீமியம் கேமிங் மாடலாக அறிமுகமாக உள்ள ரியல்மி நியோ8 (Realme Neo8) ஸ்மார்ட்போனின் ரேம், மெமரி வேரியண்ட்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த விலை விவரங்களும் மார்கெட்டில் கசிந்துள்ளன. மேலும், கேமரா பீச்சர்களை ரியல்மி நிறுவனமே உறுதி செய்துள்ளது. இந்த ரியல்மி நியோ8 ஸ்மார்ட்போனின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

பிசி ஹேண்ட்ஹெல்ட் மோட் (PC Handheld Mode) கொண்ட மாடலாக இந்த ரியல்மி நியோ8 ஸ்மார்ட்போன் வெளியாக உள்ளது. சீன மார்கெட்டில் ஜனவரி 22 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. பேட்டரி, சிப்செட், கேமரா பீச்சர்களை ரியல்மி நிறுவனமே உறுதி செய்துள்ளது. ஆனால், விலை விவரங்களை உறுதி செய்யவில்லை. இருப்பினும் மார்கெட்டில் கசிந்துவிட்டன.

வெச்சி செஞ்சிட்டாங்க.. 8000mAh பேட்டரி.. SONY கேமரா.. 120X ஜூமிங்!

12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.34,248 ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ. 40,834 ஆகவும் இருக்கிறது. மேலும், 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.38,199 ஆகவும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.44,787 ஆகவும் இருக்கிறது.

16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட டாப்-வேரியண்ட்டின் விலை ரூ.51,375 ஆக இருக்கிறது. இந்த விலைகள் சீனாவின் யுவானின் அடிப்படையில் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, இந்திய மார்கெட் அல்லது குளோபல் மார்கெட்டில் நிர்ணயிக்கப்படும் விலையில் மாற்றம் இருக்கலாம். அதேபோல இந்த விலைகள் மார்கெட்டில் கசிந்தவை மட்டுமே.

ரியல்மி நிறுவனத்தால், அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. இந்த ரேம், மெமரி மற்றும் விலை விவரங்களுடன் கேமரா பீச்சர்களும் உறுதி செய்யப்பட்டுள்ளன. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. மெயின் கேமராவுக்கு சோனி ஐஎம்எக்ஸ்896 (Sony IMX896) சென்சார் கிடைக்கிறது.

மேலும், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கிடைக்கிறது. பெரிஸ்கோப் டெலிபோட்டோவில் 3.5X ஆப்டிகல் ஜூமிங் கிடைக்கிறது. 7X லாஸ்லெஸ் ஜூமிங் கிடைக்கிறது. 120X சூப்பர் ஜூமிங் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜியும் கொடுக்கப்படுகிறது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்கு 16 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது.

ரியல்மி நியோ8 அம்சங்கள் (Realme Neo8 Specifications): 6.78 இன்ச் பிளாட் அமோலெட் டிஸ்பிளேவை இந்த ரியல்மி நியோ8 ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. மேலும், 1.5K ரெசொலூஷன், 165 Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 (Octa Core Snapdragon 8 Gen 5) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது.

ரியல்மி யுஐ 7 (Realme UI 7) கொடுக்கப்படுகிறது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 8000mAh பேட்டரியை கொடுத்துள்ளது. IP68 ரேட்டிங், IP69 ரேட்டிங் கொண்ட வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் (Water & Dust Resistance) கிடைத்துள்ளது. அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-display Fingerprint Sensor) மற்றும் ஐஆர் பிளாஸ்டர் (IR Blaster) கிடைத்துள்ளது.

சீன மார்கெட்டில் வெளியாகிய பிறகு இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளில் அறிமுகமாக இருக்கிறது. பிசி ஹேண்ட்ஹெல்ட் மோட் கிடைப்பதால் கேமிங் பிரியர்களிடையே வரவேற்பு பெற வாய்ப்புள்ளது. ஏனென்றால், போன்பேஸ்டு பிசி கேமிங்கை இந்த ரியல்மி நியோ8 ஸ்மார்ட்போன் கொடுக்க இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme Neo8 With Snapdragon 8 Gen 5 Chipset Price Variants Leaked Ahead Of China Launch Tomorrow
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X