Home
Mobile

ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யம் மிரளுது.. 8000mAh பேட்டரி.. 165 Hz டிஸ்பிளே.. 16GB ரேம்.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?

ரியல்மி நிறுவனத்தின் கேமிங் மாடலான ரியல்மி நியோ8 (Realme Neo8) ஸ்மார்ட்போனின் அறிமுகம் தேதி உறுதியாகி உள்ளது. ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 (Snapdragon 8 Gen 5), ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ், 16 ஜிபி ரேம், 8000mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் போன்ற பீச்சர்களுடன் மார்கெட்டை மிரளவிடுகிறது. இந்த ரியல்மி நியோ8 ஸ்மார்ட்போனின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

வருகிற ஜனவரி 12ஆம் தேதியில் சீன மார்கெட்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட், 120X ஜூமிங் மற்றும் பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா, டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம், கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப சைபர் பர்பிள் (Cyber ​​Purple) டிசைன், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் 16 ஜிபி ரேம் ஆகிய பீச்சர்களும் உறுதியாகி உள்ளன.

ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யம் மிரளுது.. 8000mAh பேட்டரி.. 165 Hz டிஸ்பிளே!

மற்ற பீச்சர்கள் மற்றும் விலை விவரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், டிஸ்பிளே, ஃபாஸ்ட் சார்ஜிங், பேட்டரி, கிராபிக்ஸ் கார்டு உள்ளிட்ட ஒட்டுமொத்த பீச்சர்களும் மார்கெட்டில் வெளியாகி இருக்கின்றன. அதேபோல ரியல்மி நியோ 8 போனின் பட்ஜெட் விவரங்களும் வெளியாகி இருக்கின்றன. ரியல்மி நியோ 7 ஸ்மார்ட்போனின் பட்ஜெட்டை பொறுத்து இருக்கும்.

ரியல்மி நியோ8 அம்சங்கள் (Realme Neo8 Specifications): குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 (Qualcomm Snapdragon 8 Gen 5) சிப்செட்டை இந்த ரியல்மி நியோ8 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மேலும், அட்ரினோ 829 ஜிபியு (Adreno 829 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுத்துள்ளது. 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி மெமரி கொடுக்க உள்ளது.

165 Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.78 இன்ச் சாம்சங் அமோலெட் (Samsung AMOLED) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும், 1.5K ரெசொலூஷன் கிடைக்க உள்ளது. கேமிங் மாடலாக இருப்பதால், FPS அல்ட்ரா பிரீமியமாக இருக்கும். 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கிடைக்க உள்ளது.

ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யம் மிரளுது.. 8000mAh பேட்டரி.. 165 Hz டிஸ்பிளே!

இந்த டெலிபோட்டோவில் 120X ஜூமிங் கிடைக்க இருக்கிறது. ஆகவே, ஆப்டிகல் ஜூமிங் இருக்கும். ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கும். வீடியோ கால்கள் மற்றும் செல்பீகளுக்காக 16 எம்பி செல்பீ கேமராவை இந்த ரியல்மி நியோ8 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது.

பெரிய 8000mAh பேட்டரி மற்றும் அந்த பேட்டரிக்கு 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. 3டி அல்ட்ராசோனிக் இன் டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (3D Ultrasonic In-display Fingerprint Sensor) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கின்றன. மேலும், IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொடுக்கிறது.

சீனாவில் முன்னதாக வெளியான ரியல்மி நியோ7 ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் +256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.25,000 பட்ஜெட்டில் இருந்தது. இதிலும் 7000mAh பேட்டரி, 80W சார்ஜிங், டைமன்சிட்டி 9300+ 4என்எம், அமோலெட் டிஸ்பிளே மற்றும் IP69 ரேட்டிங் கிடைத்தது. ஆனால், டெலிபோட்டோ இல்லை. ஆகவே, நியோ8 ஸ்மார்ட்போன் ரூ.30,000 பட்ஜெட்டில் வரலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme Neo8 With Snapdragon 8 Gen 5 Chipset 50MP Camera Launching on January 12 in China
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X