Home
Mobile

மொத்த மார்கெட் மிரளுது.. 8000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. 165Hz டிஸ்பிளே.. 120X பெரிஸ்கோப் கேமரா.. எந்த மாடல்?

ரியல்மி நிறுவனத்தின் மிட்-பிரீமியம் கேமிங் மாடலான ரியல்மி நியோ8 (Realme Neo8) ஸ்மார்ட்போனின் பேட்டரி பீச்சர்கள் உறுதியாகி இருக்கின்றன. ஏற்கனவே, டிஸ்பிளே பீச்சர்கள் உறுதியாகி ஒட்டுமொத்த மார்கெட்டையும் மிரளவிட்டது. இப்போது, பேட்டரி பீச்சர்கள் உறுதியாகி அந்த ஸ்மார்ட்போன் மீதான எதிர்பார்ப்பை எகிறவிட்டுள்ளது. இந்த ரியல்மி நியோ8 ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

வருகிற ஜனவரி 20ஆம் தேதி சீன மார்கெட்டில் இந்த ரியல்மி நியோ8 ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. முன்னதாக 165 Hz ரெஃப்ரெஷ் ரேட், பிளாட் டிசைன் மற்றும் சாம்சங் எம்14 (Samsung M14) அமோலெட் டிஸ்பிளே கிடைக்க இருப்பது உறுதியானது. இந்த பீச்சர்களுடன் பேட்டரி, கனெக்டிவிட்டி, ஆடியோ மற்றும் ரெசிஸ்டன்ஸ் பீச்சர்களும் இப்போது உறுதியாகி இருக்கின்றன.

மொத்த மார்கெட் மிரளுது.. 8000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?

80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 8000mAh பேட்டரி கிடைக்க உள்ளது. இதில் ஃபைபாஸ் சார்ஜிங் (Bybass Charging) வர உள்ளது. IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) இந்த ரியல்மி நியோ8 ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கிறது. அல்ட்ராசோனிக் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic Fngerprint Sensor) கிடைக்கிறது.

வெட் ஹேண்ட் டச் (Wet Hand Touch) சப்போர்ட் கொண்டுள்ளது. மேலும், கிரிஸ்டல் ஆர்மர் கிளாஸ் (Crystal Armor Glass) மற்றும் ஸ்க்ராட்ச் ரெசிஸ்டன்ஸ் (Scratch Resistance) கொடுக்கப்பட்டு உள்ளது. கேமிங் பிரியர்களுக்காக எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் மேட்டார் (X-axis Linear Motor) வருகிறது. சூப்பர் லீனியர் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Super-linear Stereo Speaker) கொடுக்கப்பட்டு உள்ளன.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மட்டுமல்லாமல், ஐஆர் பிளாஸ்டர் (IR Blaster) இதில் கிடைக்கிறது. டூயல் ஃபிரிகொன்சி ஜிபிஎஸ் மற்றும் டிரை-ஃபிரிகொன்சி பெய்டூ (Tri-frequency Beidou) கிடைக்கிறது. மேலும், மல்டி-ஆங்கிள் என்எப்சி (Multi Angle NFC) கொடுக்கப்பட்டு உள்ளது. முன்னதாக வெளியான டிஸ்பிளே பீச்சர்களும் மார்கெட்டை மிரளவிடுகின்றன.

ஏனென்றால், 165 Hz ரெஃப்ரெஷ் ரேட் மட்டுமல்லாமல், 6500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட சாம்சங் எம்14 டிஸ்பிளேவை இந்த ரியல்மி நியோ8 ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. மேலும், 103 சதவீத டிசிஐ பி3 (DCI P3) கலர் காமட், 165 எப்பிஎஸ் கேமிங் அவுட்புட் மற்றும் 360 Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 3,800Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது.

165 எப்பிஎஸ் கேமிங் அவுட்புட் கிடைக்கிறது. மேலும், கிரீன்-பீல்டு ஐ-கேர் மோட் (Green-field Eye-care Mode) உள்ளது. ஓர்ஜின் ஒயிட் (Origin White), மெச்சா கிரே (Mecha Gray) மற்றும் சைபர் பர்ப்பிள் (Cyber Purple) ஆகிய கலர்களில் கிடைக்க உள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட்டுடன் கொண்ட மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ரியல்மி நியோ8 அம்சங்கள் (Realme Neo8 Specifications): 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் கிடைக்க உள்ளன. அட்ரினோ 829 ஜிபியு (Adreno 829 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்க உள்ளது. 120X ஜூமிங் கொண்ட 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா வர இருக்கிறது.

6.78 இன்ச் பிளாட் டிஸ்பிளே கிடைக்க உள்ளது. பெரிஸ்கோப் கேமரா மட்டுமல்லாமல், 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்க உள்ளது. வீடியோ கால்கள் மற்றும் செல்பீகளுக்கு 16 எம்பி செல்பீ கேமரா கிடைக்க உள்ளது. ரூ.30,000 பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம். சீன மார்கெட்டுக்கு பிறகு குளோபல் மற்றும் இந்தியாவில் எதிர்பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme Neo8 With 8000mAh Battery 80W Charging Confirmed Ahead Of January 20 Launch in China
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X