வெச்சி செஞ்சிட்டாங்க.. 165Hz டிஸ்பிளே.. 6500 நிட்ஸ் பிரைட்னஸ்.. 8000mAh பேட்டரி.. 24 ஜிபி ரேம்.. எந்த மாடல்?
ரியல்மி நிறுவனத்தின் அல்ட்ரா பிரீமியம் கேமிங் மாடலான ரியல்மி நியோ8 (Realme Neo8) ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே பீச்சர்கள் உறுதியாகி இருக்கின்றன. 165 Hz சாம்சங் எம்14 டிஸ்பிளேவை கொடுப்பது மட்டுமல்லாமல், 6500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 165 எப்பிஎஸ் கேமிங், 360 Hz 10 ஃபிங்கர் டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. இந்த ரியல்மி நியோ8 ஸ்மார்ட்போனின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
சீன மார்கெட்டில் ஓரிரு வாரத்தில் இந்த ரியல்மி நியோ8 ஸ்மார்ட்போன் வெளியாக உள்ளது. கேமிங் பிரியர்களுக்கு பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 (Snapdragon 8 Gen 5) சிப்செட் கிடைக்க இருப்பது உறுதியாகியது. மேலும், சைபர் பர்பிள் (Cyber Purple) டிசைனும் உறுதியாகியது. இப்போது, பிரீமியம் கேமிங் டிஸ்பிளே கொண்ட மாடலாக இருப்பதும் உறுதியாகி இருக்கிறது.

165 Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட சாம்சங் எம்14 டிஸ்பிளேவை (Samsung M14 Display) கொண்டுள்ளது. பிரீமியம் ஈ-ஸ்போர்ட்ஸ் டிஸ்பிளே மாடலாக இருப்பதால், பீச்சர்கள் வாரி வழங்கப்பட்டு உள்ளன. 6500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 3,800 நிட்ஸ் டைபிகல் பிரைட்னஸ் மற்றும் 1,000 நிட்ஸ் மேனுவல் பிரைட்னஸ் கொண்டுள்ளது. 103 சதவீத டிசிஐ பி3 (DCI P3) கலர் காமட் கிடைக்கிறது.
3,800Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் (Instant Touch Sampling Rate) மற்றும் 360 Hz ஃபிங்கர் டச் சாம்பிளிங் ரேட் கொடுத்துள்ளது. மேலும், 10 எம்எஸ் டச் ரெஸ்பான்ஸ் லேட்டன்சி கொண்டுள்ளது. 165 எப்பிஎஸ் கேமிங் அவுட்புட் கொடுக்கிறது. மேஜிக் டச் கன்ட்ரோல் (Magic Touch Control) கொண்ட கஸ்டமைஸ்டு மேஜிக் டச் சிப் (Customized Magic Touch Chip) கிடைக்கிறது.
ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட் போக டிஸ்பிளேவுக்கு பிரத்யேக சிப்செட்டாக இது இருக்கிறது. மேலும், ஏஐ ஐ-புரொடக்சன் பீச்சர்களை (AI Eye-protection Features) கொடுக்கிறது. கிரீன்-பீல்டு ஐ-கேர் மோட் (Green-field Eye-care Mode) கிடைக்கிறது. இப்படி ஒட்டுமொத்தமாக டிஸ்பிளேவில் அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களை பேக் செய்துள்ளது. இப்போது, மற்ற பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
ரியல்மி நியோ8 அம்சங்கள் (Realme Neo8 Specifications): 6.78 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மற்றும் 1.5K ரெசொலூஷன் கொண்ட மாடலாக இருக்கிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட்டுடன் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்க உள்ளது. மேலும், அட்ரினோ 829 ஜிபியு (Adreno 829 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது.
16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் கிடைக்க உள்ளது. மேலும், 24 ஜிபி ரேம் கொண்ட வேரியண்ட்டும் கிடைக்க உள்ளது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி மற்றும் 120X ஜூமிங் கொண்ட கேமரா சிஸ்டமானது இந்த ரியல்மி நியோ8 ஸ்மார்ட்போனில் கிடைக்க உள்ளது.
50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கொண்டுள்ளது. 16 எம்பி செல்பீ கேமரா உள்ளது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 8000mAh பேட்டரி கிடைக்கிறது. IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் உள்ளது. ரூ.30,000 பட்ஜெட்டில் இருந்து ரூ.40,000 பட்ஜெட்டுக்குள் வெளியாக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








