Home
Mobile

யாரு சாமி அவன்.. ரூ.25000 பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. SONY கேமரா.. OLED டிஸ்பிளே.. 12GB ரேம்.. எந்த மாடல்?

ஒட்டுமொத்த மார்கெட்டும் மிரளும்படியான பட்ஜெட்டில் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7000mAh பேட்டரி, சோனி ஐஎம்எக்ஸ் சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா, 6000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட ஓஎல்இடி டிஸ்பிளே, 12 ஜிபி ரேம் போன்ற பிரீமியம் பீச்சர்களுடன் ரியல்மி நியோ7 (Realme Neo7) போன் வெளியாகி இருக்கிறது. இந்திய பிரியர்களை வெயிட்டிங் மோடில் காக்க வைத்திருக்கும் இந்த ரியல்மியின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ரியல்மி நியோ7 அம்சங்கள் (Realme Neo7 Specifications): இந்த நியோ7 போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் 4என்எம் ஆக்டா கோர் டைமன்சிட்டி 9300பிளஸ் எஸ்ஓசி (4nm Octa Core Dimensity 9300+ SoC) கிடைக்கிறது. ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) மற்றும் ஜிபியு இம்மார்டலிஸ் ஜி720 (GPU Immortalis G720) கிடைக்கிறது.

யாரு சாமி அவன்.. ரூ.25000 பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. SONY கேமரா போன்!

ஆகவே, பர்ஃபாமென்ஸ் பின்னிப்பெடல் எடுக்கும்படி எதிர்பார்க்கலாம். டிஸ்பிளேவிலும் பிரீமியம் அவுட்புட் கொடுக்கும்படி பிஓஈ எஸ்2 (BOE S2) கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 360Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 6000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.78 இன்ச் (2780× 1264 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) பேனல் வருகிறது.

மேலும், 2600Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் டிசி டிம்மிங் சப்போர்ட் உள்ளது. பிரீமியம் டிஸ்பிளே பீச்சர்கள் கிடைப்பதால், கிரிஸ்டல் ஆர்மோர் கிளாஸ் (Crystal Armor Glass) புரொடெக்சன் இருக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) சப்போர்ட் கொண்ட பிரீமியம் டூயல் ரியர் கேமரா செட்டப் கிடைக்கிறது.

பிரீமியம் சென்சார்களும் பேக் செய்துள்ளது. 50 எம்பி மெயின் கேமரா (சோனி ஐஎம்எக்ஸ்882 - Sony IMX882) மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. இந்த ரியல்மி நியோ7 போனின் 16 எம்பி செல்பீ கேமராவிலும் சோனி சென்சார் கிடைக்கிறது. ஆகவே, கேமரா பீச்சர்களிலும் ரியல்மி மொபைல் பிரியர்களை தட்டித் தூக்கி இருக்கிறது.

கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப டிஸ்பிளே மற்றும் கிராபிக்ஸ் கார்டு இருப்பதால், பேட்டரியும் அதற்கு ஏற்ப கிடைக்கிறது. இந்த ரியல்மி நியோ7 போனில் பெரிய 7000mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) கிடைக்கிறது. டிஸ்பிளேவுக்கு கிடைத்த புரொடெக்சன் போலவே வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் இருக்கிறது.

அதாவது, IP68 ரெசிஸ்டன்ட் மற்றும் IP69 ரெசிஸ்டன்ட் கொடுக்கிறது. இன்பிராரெட் சென்சாரும் (Infrared Sensor), ஆப்டிகல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சாரும் (Optical In-display Fingerprint Sensor) இருக்கிறது. பேட்டரிக்கு மட்டுமல்லாமல், ஆடியோவுக்கும் டைப்-சி (Type-C) போர்ட் மட்டுமே கிடைக்கிறது. 5ஜி மற்றும் டூயல் 4ஜி கனெக்டிவிட்டி உள்ளது.

இந்த ரியல்மி நியோ7 போனில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட்டும் கிடைக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.25,665ஆக இருக்கிறது. 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.26,835ஆக இருக்கிறது. மேலும் மூன்று வேரியண்ட்கள் இருக்கின்றன.

ஆகவே, 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.29,170ஆகவும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.32,675ஆகவும், 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.38,510ஆகவும் இருக்கிறது. சீனாவில் வெளியாகி ப்ரீ-ஆர்டருக்கு வந்துள்ளது. டிசம்பர் 16ஆம் தேதி முதல் விற்பனை தொடங்க இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme Neo7 With 50MP Camera 7000mAh Battery Sale From December 16 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X