மொத்த சாம்ராஜ்யம் மிரளுது.. 7000mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. 16GB ரேம்.. 1TB மெமரி.. டிரான்ஸ்பரன்ட் மாடல்!
டிரான்ஸ்பரன்ட் கிரே டிசைன் மட்டுமல்லாமல், அல்ட்ரா பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் மீடியாடெக் டைமன்சிட்டி 9400இ சிப்செட், 7000mAh பேட்டரி, 100W ஃபாஸ்ட் சார்ஜிங், 16 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி மெமரி போன்ற பீச்சர்களுடன் ரியல்மி நியோ7 டர்போ (Realme Neo7 Turbo) போனானது வெளியாக இருக்கிறது. இந்த டர்போ மாடலின் வெளியீட்டு தேதி உறுதியாகி இருக்கிறது. அதே நேரத்தில் பீச்சர்களும் மார்கெட்டில் கசிந்துள்ளன. இதுகுறித்த விவரங்கள் இதோ.
மே 29ஆம் தேதி இந்த ரியல்மி நியோ7 டர்போ வெளியாக இருக்கிறது. அந்த நிறுவனத்தின் முதல் டிரான்பரன்ட் டிசைன் மாடலாக இந்த போன் கிடைக்க இருக்கிறது. இந்த வெளியீட்டு தேதியுடன் சிப்செட், கலர் மற்றும் டிசைன் விவரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. ஆகவே, இதில் டிரான்பரன்ட் கிரே (Transparent Gray) கலரில் இந்த டர்போ மாடல் வெளியாக இருக்கிறது.

அதேபோல நியோ சீரிஸ்களில் கிடைக்கும் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் டார்ட் சார்ஜ் (DART Charge) லோகோ இடம்பெற்றிருக்கிறது. பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொண்ட மீடியாடெக் டைமன்சிட்டி 9400இ (MediaTek Dimensity 9400e) சிப்செட் இந்த போனில் கிடைக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே உறுதியாகி இருக்கின்றன.
ரியல்மி நியோ7 டர்போ அம்சங்கள் (Realme Neo7 Turbo Specifications): மேற்கண்ட பீச்சர்கள் மட்டுமல்லாமல், முக்கிய பீச்சர்களும் மார்கெட்டில் வெளியாகி இருக்கின்றன. ஆகவே, இந்த நியோ7 டர்போ போனில் 1.5K ரெசொலூஷன் கொண்ட பிளாட் அமோலெட் (Flat AMOLED) டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. டைமன்சிட்டி 9400இ சிப்செட்டுடன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) வருகிறது.
கேமிங் மாடலாக இருப்பதால், 7,000mAh பேட்டரி மற்றும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. ரியல்மி யுஐ 6 (Realme UI 6) மட்டுமல்லாமல், கேமிங் பிரியர்களுக்கான ஏஐ பீச்சர்களும் இடம்பெறுகிறது. 16 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி மெமரி கொண்ட டாப்-எண்ட் வேரியண்ட் கிடைக்க இருக்கிறது. அதேபோல 512 ஜிபி மெமரி மற்றும் 256 ஜிபி மெமரி வேரியண்ட்களும் கிடைக்க இருக்கிறது.

50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. என்எப்சி (NFC) கனெக்டிவிட்டி வருகிறது. டிரான்ஸ்பரன்ட் எக்ஸ்ப்ளோரர் எடிஷன் (Transparent Explorer Edition) மாடலாக வெளியாக இருக்கிறது. இந்த சிப்செட் பிரீமியம் மாடல்களில் மட்டுமே கிடைக்க இருக்கிறது. ஏனென்றால், ஒன்பிளஸ் ஏஸ் 5 ரேசிங் எடிஷனில் (OnePlus Ace 5 Racing Edition) வர இருக்கிறது.
ஆகவே, பர்ஃபாமென்ஸ் பக்கமாக பார்த்தால், ஒன்பிளஸ் ஏஸ் 5 ரேசிங் எடிஷனுக்கு போட்டி மாடலாக இந்த ரியல்மி நியோ7 டர்போ மாடலை எதிர்பார்க்கலாம். இரண்டுமே கேமிங் மாடலாக இருப்பதால், அதற்கான பீச்சர்களையும் இவற்றில் எதிர்பார்க்கலாம். இந்த ஒன்பிளஸ் ஏஸ் 5 ரேசிங் எடிஷன் போனானது மே 27ஆம் தேதி சீனாவில் வெளியாக இருக்கிறது.
ராக் பிளாக் (Rock Black), ஒயிட் (White) மற்றும் வைல்டர்னஸ் கிரீன் (Wilderness Green) கலரில் வெளியாக இருக்கிறது. 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் டாப்-எண்ட் மாடலாக இருக்கிறது. 1.5K ரெசொலூஷன் டிஸ்பிளே, டூயல் கேமரா போன்ற பீச்சர்கள் உள்ளன. இது கிட்டத்தட்ட ரியல்மி நியோ7 டர்போவை போலவே இருக்கிறது.
ஆனால், விலையை பொறுத்தவரையில் ஒன்பிளஸ் ஏஸ் 5 ரேசிங் எடிஷன் அதிகமாக இருக்கும். அதுவே ரியல்மி நியோ7 டர்போவின் ஆரம்ப விலை மலிவாக இருக்கும். இந்த மாடல்களில் இந்தியாவில் வெளியாகுமா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம். ரியல்மி நிறுவனத்தின் டர்போ மாடல்கள் ஏற்கனவே, இந்தியாவில் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








