இது எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்.. சோனி கேமரா.. 7200mAh பேட்டரி.. புது Realme 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி நியோ7 டர்போ (realme Neo7 Turbo) ஸ்மார்ட்பானை இப்போது சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த போன் இந்தியா மற்றும் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இப்போது இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ரியல்மி நியோ7 டர்போ அம்சங்கள் (realme Neo7 Turbo Specifications): 6.78-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே (OLED display) வசதியுடன் ரியல்மி நியோ7 டர்போ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 6500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 100% டிசிஐ பி3 கலர் காமட் (DCI P3 Colour Gamut) உள்ளிட் பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

3.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் டைமன்சிட்டி 9400இ 4எம்எம் (3.4GHz Octa-Core Dimensity 9400e 4nm) சிப்செட் வசதியுடன் ரியல்மி நியோ7 டர்போ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் இம்மார்டலிஸ் ஜி720 எம்சி12 ஜிபியு (Immortalis G720 MC12 GPU) கிராபிக்ஸ் கார்டு இந்த போனில் கொடுக்கப்பட்டுள்ளது.
ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0)சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த ரியல்மி போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு வசதிகள் கிடைக்கும். இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்( In-display Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) வசதியும் இந்த போனில் உள்ளது.
50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது ரியல்மி நியோ7 டர்போ ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. குறிப்பாக இந்த போன் மூலம் 4கே வீடியோ பதிவு செய்யும். பின்பு பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio)உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் இந்த ரியல்மி நியோ7 டர்போ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவும் இந்த போனில் உள்ளது.
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 7 802.11 பிஇ, ப்ளூடூத் 5.4இ ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள இந்த ரியல்மி போனில் உள்ளன. மேலும் 7200mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி நியோ7 டர்போ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W சார்ஜிங் வசதி உள்ளது.
விலை
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நியோ7 டர்போ மாடலின் விலை 1999 yuan (இந்திய மதிப்பில் ரூ.23,710)
16ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நியோ7 டர்போ மாடலின் விலை 2299 yuan (இந்திய மதிப்பில் ரூ.27,270)
12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நியோ7 டர்போ மாடலின் விலை 2499 yuan (இந்திய மதிப்பில் ரூ.29,650)
16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நியோ7 டர்போ மாடலின் விலை 2699 yuan (இந்திய மதிப்பில் ரூ.32,025)
வரும் மே 31-ம் தேதி முதல் இந்த புதிய ரியலமி போன் சீனாவில் விற்பனைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications








