Home
Mobile

டிச.12 குறிச்சாச்சு.. பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. OLED டிஸ்பிளே.. 80W சார்ஜிங்.. OIS கேமரா.. எந்த மாடல்?

வந்தா ராஜாவாதான் வருவேன்னு, ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி நியோ7 (Realme Neo7) போன் வெளியாக இருக்கிறது. 7000mAh பேட்டரியிலேயே மார்கெட்டை மிரளவிட்டது மட்டுமல்லாமல், ஓஎல்இடி டிஸ்பிளே, 80W ஃபாஸ்ட் சார்ஜிங், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கேமரா போன்ற பீச்சர்களை கொடுக்க இருக்கிறது. இப்போது, பிரீமியம் டிசைனுடன் ஸ்டார்ஷிப் எடிஷனில் (Starship Edition) வெளியாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ரியல்மி நியோ7 போனின் பீச்சர்கள் மற்றும் பீச்சர்கள் எப்படி இருக்கும்?

சீன மார்கெட்டில் வரும் டிசம்பர் 11ஆம் தேதி இந்த ரியல்மி நியோ7 வெளியாக இருக்கிறது. தேதி நெருங்குவதால், டிசைன் மற்றும் பீச்சர்கள் மார்கெட்டில் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே, 7000mAh பேட்டரி மற்றும் அல்ட்ரா பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் டைமன்சிட்டி 9300பிளஸ் (Dimensity 9300+) சிப்செட் பீச்சர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்போது, டிசைன் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.

டிச.12 குறிச்சாச்சு.. பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. OLED டிஸ்பிளே மாடல்!

சில்வர் கலரில் ஸ்டார்ஷிப் எடிஷனில் இந்த ரியல்மி நியோ7 வெளியாகும் இருப்பதாக ரியல்மி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருக்கிறது. ஜியோமெட்ரிக் கட் ஆங்கிள் டிசைனில் மெட்டாலிக் பம்ப் கேமரா சிஸ்டம் கொண்டிருக்கிறது. இது மார்கெட்டுக்கு புதிய டிசைனாகும். இந்த பீச்சர்கள் மட்டுமல்லாமல், மார்கெட்டில் முழு பீச்சர்கள் ஏற்கனவே கசிந்துவிட்டன. அதை இப்போது பார்ப்போம்.

ரியல்மி நியோ7 அம்சங்கள் (Realme Neo7 Specifications): இந்த ரியல்மியில் 4என்எம் ஆக்டா கோர் டைமன்சிட்டி 9300பிளஸ் (4nm Octa Core Dimensity 9300+) சிப்செட் மட்டுமல்லாமல், இம்மார்டலிஸ் ஜி720 ஜிபியு (Immortali G720 GPU) மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.78 இன்ச் (2780 × 1264 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்கிறது.

ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் சப்போர்ட் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருகிறது. இந்த ரியல்மி நியோ7 போனில் 16 எம்பி செல்பீ கேமரா மற்றும் ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) கிடைக்கிறது. 12 ஜிபி ரேம் மற்றும் 256 மெமரி இருக்கிறது. மேலும், 16 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் கிடைக்க இருக்கிறது.

இந்த ரியல்மியின் பேட்டரி சிஸ்டம் மார்கெட்டை மிரளவிட்டிருக்கிறது. ஏனென்றால், முதல் முறையாக மிட்-ரேஞ்ச் செக்மெண்ட்டைவிட கம்மியான பட்ஜெட்டில் பிரீமியம் பீச்சர்களுடன் 7000mAh பேட்டரியை கொடுக்கிறது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங் இருக்கிறது. IP68 ரெசிஸ்டன்ட் மட்டுமல்லாமல், IP69 ரெசிஸ்டன்ட் கிடைப்பதால், வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் பட்டையை கிளப்பும்.

பெரிய பேட்டரி வருவதால், 8.56 எம்எம் தடிமன் மற்றும் 213 கிராம் எடை வருகிறது. இந்த ரியல்மியில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் (In-display Fingerprint) மட்டுமல்லாமல் இன்பிராரெட் சென்சாரும் (Infrared Sensor) பேக் செய்யப்பட்டுள்ளது. அதேபோல ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் கிடைக்கிறது. டைப்-சி ஆடியோவும் இருக்கிறது.

இந்த ரியல்மி நியோ7 போனின் விலை விவரங்களும் கசிந்துள்ளன. ஆகவே, இந்த போனின் ஆரம்ப விலை ரூ.29,060 பட்ஜெட்டில் இருக்க வாய்ப்புள்ளதாக மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆகவே, பட்ஜெட் செக்மெண்ட் பிரியர்களிடையேயும் இந்த ரியல்மி நியோ7 போன் மிகப்பெரும் வரவேற்பு பெற வாய்ப்புள்ளது. 7000mAh பேட்டரி வருவதால், கூடுதல் கேமிங் பீச்சர்களும் கிடைக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme Neo7 Starship Edition Goes Official December 11 in China Check Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X