Home
Mobile

வாங்குனா இதுதான்.. ரூ.23,965 போதும்.. OLED டிஸ்பிளே.. 7000mAh பேட்டரி.. SONY கேமரா.. 12GB ரேம்.. எந்த மாடல்?

வாங்குனா இந்த போனத்தான் வாங்கனும் என்று ரியல்மி பிரியர்கள் வெயிட் செய்து வாங்க வைக்கும்படியான பட்ஜெட்டில் ஓஎல்இடி டிஸ்பிளே, 7000mAh பேட்டரி, 80W சார்ஜிங், சோனி சென்சார் கேமரா, 12 ஜிபி ரேம், 1 டிபி மெமரி போன்ற பீச்சர்களுடன் ரியல்மி நியோ7 எஸ்இ (Realme Neo7 SE) போன் களமிறங்க இருக்கிறது. பிப்ரவரி 25ஆம் தேதி வெளியாகிறது. சிப்செட் மற்றும் விலை விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகிவிட்டன. மற்ற பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன. அந்த பீச்சர்களை தெரிந்து கொள்வோம்.

ரியல்மி நியோ7 எஸ்இ அம்சங்கள் (Realme Neo7 SE Specifications): இந்த ரியல்மி போனில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.78 இன்ச் (2780 × 1264 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. 4என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 8400 மேக்ஸ் (4nm MediaTek Dimensity 8400 MAX) சிப்செட் மட்டுமல்லாமல், மாலி ஜி720 ஜிபியு (Mali G720 GPU) கிராபிக்ஸ் கார்டு வர இருக்கிறது.

வாங்குனா இதுதான்.. ரூ.23,965 போதும்.. OLED டிஸ்பிளே.. 7000mAh பேட்டரி!

லேட்டஸ்ட் மாடல்களில் கிடைக்கும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) வருகிறது. இதோடு ரியல்மி யுஐ 6.0 (Realme UI 6.0) கிடைக்கிறது. 12 ஜிபி ரேம், 16 ஜிபி ரேம் வேரியண்ட்கள் கிடைக்க இருக்கின்றன. 256 ஜிபி மெமரி, 512 ஜிபி மெமரி மற்றும் 1 டிபி மெமரி சப்போர்ட் கொடுக்கப்பட இருக்கிறது. டிசைன் விவரங்கள் வெளியாகியாகிதால், டூயல் ரியர் கேமரா உறுதியாகிவிட்டது.

ஆகவே, சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்க இருக்கிறது. அதேபோல சோனி சென்சாருடன் 16 எம்பி செல்பீ ஷூட்டர் வர இருக்கிறது. பேட்டரி பேக்கப் நம்ப முடியாத அளவுக்கு எதிர்பார்க்கலாம்.

ஏனென்றால், இந்த ரியல்மி நியோ7 எஸ்இ போனில் 7000mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது. இந்த பேட்டரிக்கு 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வர இருக்கிறது. பேக்கப் அதிகமாக கிடைப்பதால், கேமிங் பிரியர்களுக்கான பீச்சர்களையும் எதிர்பார்க்கலாம். அதேபோல பேட்டரிக்கும் ஓவர் சார்ஜிங் கன்ட்ரோல், பேட்டரி ஹூட் கன்ட்ரோல் போன்ற டெக்னாலஜிகள் கிடைக்கலாம்.

மேலும், பெரிய பேட்டரி வருவதால், 8.56 எம்எம் தடிமனில் கிடைக்க இருக்கிறது. அதேபோல எடையும் 212.1ஆக இருக்க போகிறது. இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) மற்றும் இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor) கிடைக்கிறது. மேலும், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) சப்போர்ட் கொண்ட மாடலாக இருக்கிறது.

இதுபோக ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் கிடைக்கிறது. டைப்-சி ஆடியோ சப்போர்ட் உள்ளது. இந்த ரியல்மி நியோ7 எஸ்இ போனில் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ ( Dual 4G VoLTE) மற்றும் வை-பை 7 (Wi-Fi 7) கனெக்டிவிட்டிகள் வருகின்றன. மேற்கண்ட் பீச்சர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

மார்கெட்டில் கசிந்தவை மட்டுமே. ஆனால், விலை விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகிவிட்டது. ரூ.25,000 பட்ஜெட்டில் ஆரம்ப விலை இருக்கப் போகிறது. குறிப்பாக 2,000 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.23,965) விலையில் வரும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 25ஆம் தேதி சீனாவில் வெளியாக இருக்கிறது. அதன் பிறகு இந்தியாவில் எதிர்பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
Realme Neo7 SE With Dimensity 8400 MAX To Launch on February 25 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X