Home
Mobile

மிரண்டு போச்சு.. ரூ.21,645 போதும்.. 7000mAh பேட்டரி.. OLED டிஸ்பிளே.. SONY கேமரா.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?

ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் மார்கெட்டே மிரண்டு போச்சுங்க என்று அடித்து சொல்லும்படி வெறும் ரூ.21,465 பட்ஜெட்டில் 7000mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுல்லாமல், ஓஎல்இடி டிஸ்பிளே, சோனி சென்சார் கேமரா, IP66, IP68 மற்றும் IP69 ரெசிஸ்டன்ட் போன்ற நம்ப முடியாத பீச்சர்களுடன் ரியல்மி நியோ7 எஸ்இ (Realme Neo7 SE) களமிறங்கி இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் இப்படியான பீச்சர்களுடன் வேறு போன் கிடைப்பது குதிரைக்கொம்பாகும். இந்த ரியல்மி நியோ7 எஸ்இ போனின் முழு விவரங்கள் இதோ.

கேமிங் பிரியர்களுக்கான மாடலாக இருப்பதால், 3டி மைக்ரோ-கான்வேக்ஸ் மெக்கா டெக்சர் டிசைனில் ப்ளூ மெக்கா எடிஷன் (Blue Mecha Edition), ஒயிட் வின்ங்டு காட் ஆஃப் வார் (White Winged God of War) மற்றும் டார்க் ஆர்மர்டு கேவல்ரி (Dark Armored Cavalry) ஆகிய கலர்களில் கிடைக்கிறது. இந்த டிசைனுக்கு ஏற்ப டியூரபிலிட்டி கொடுக்க IP66, IP68 மற்றும் IP69 ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது.

மிரண்டு போச்சு.. ரூ.21,645 போதும்.. 7000mAh பேட்டரி.. OLED டிஸ்பிளே!

ரியல்மி நியோ7 எஸ்இ அம்சங்கள் (Realme Neo7 SE Specifications): இந்த ரியல்மி போனானது டிசைன் மட்டுமல்லாமல், பீச்சர்களிலும் பிரீமியம் காட்டி இருக்கிறது. 6.78 இன்ச் (2780 × 1264 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த பிஓஇ எஸ்2 (BOE S2) டிஸ்பிளே மாடலில் 6000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் கிரிஸ்டல் ஆர்மர் கிளாஸ் (Crystal Armor Glass) புரொடெக்சன் கிடைக்கிறது.

மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 360Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 2600Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. ஐ புரொடெக்சன் கேமிங் (Eye Protection Gaming) சப்போர்ட் கொடுக்கிறது. ஆகவே, கேமிங் பிரியர்கள் பட்டையை கிளப்பும் அவுட்புட் எதிர்பார்க்கலாம். இதற்கான பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி சிப்செட், கிராபிக்ஸ் கார்டு மற்றும் யுஐ அவுட்புட் கிடைக்கின்றன.

அதாவது, பக்கா கேமிங் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் ஆக்டா கோர் 4என்எம் டைமன்சிட்டி 8400 மேக்ஸ் எஸ்ஓசி (Octa Core 4nm Dimensity 8400 MAX SoC) சிப்செட் மற்றும் மாலி ஜி720 ஜிபியு (Mali G720 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) மற்றும் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேக் செய்துள்ளது. இந்த ரியல்மி போனில் 4 வேரியண்ட்கள் உள்ளன.

கேமிங் மாடலாக இருந்தும் கேமரா பிரியர்களையும் தட்டித்தூக்கும்படி சென்சார்களை கொடுத்துள்ளது. ஆகவே, சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா கிடைக்கிறது. ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி மற்றும் 16 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. 80W பேட்டரி மற்றும் 7000mAh டைட்டன் பேட்டரி கிடைக்கிறது.

பெரிய பேட்டரி கிடைப்பதால், ஹை ஏர்ஃப்ளோ கோல்ட் ஃபிரண்ட் கூலிங் (High Airflow Cold Front Cooling) சப்போர்ட் கிடைக்கிறது. 212 கிராம் எடை மற்றும் 8.56 மிமீ தடிமன் இருக்கிறது. இந்த ரியல்மி நியோ7 எஸ்இ போனின் 8 ஜிபி ரேம் +256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.21,645ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.22,850ஆகவும் இருக்கிறது.

12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.26,460ஆகவும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.30,070ஆகவும் இருக்கிறது. இந்த விலையுடன் சீன மார்கெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்தியாவில் அடுத்த சில வாரங்களில் இந்த ரியல்மி நியோ7 எஸ்இ மாடலை எதிர்பார்க்கலாம். ஆனால், விலையில் மாற்றம் இருக்க வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme Neo7 SE With 50MP Camera Launched Under Rs 22000 in China Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X