புத்தாண்டுக்கு புது போன்.. 8000mAh பேட்டரி, IP69 ரேட்டிங், உடன் புது Realme போன்.. மிட்-ரேன்ஜ் மிரளும் விலை!
2026 ஆம் ஆண்டு எப்போது பிறக்கும் என்று பெரும்பாலான ஸ்மார்ட்போன் பிராண்டுகள் பல்லை கடித்துக்கொண்டு காத்திருக்கின்றன. 2026 ஜனவரி முதல் வாரத்தில் இருந்தே பல நிறுவனங்களின் புதிய ஸ்மார்ட்போன்கள் வரிசையாக அறிமுகம் செய்யப்பட உள்ளன. அந்த பட்டியலில் ரியல்மி (Realme) நிறுவனமும் சேர்கிறது.
நம்பகமான டிப்ஸ்டர் ஆன டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கிடைத்துள்ள சமீபத்திய தகவல் ஆனது - ரியல்மி நிறுவனமானது, அதன் நியோ-பிராண்டட் ஸ்மார்ட்போனுடன் 2026 புத்தாண்டை தொடங்கக்கூடும் என்கிறது. இது ஆண்டின் தொடக்கத்தில் பெர்பார்மென்ஸ் சார்ந்த டிவைஸ்களை வெளியிடும் ரியல்மி நிறுவனத்தின் சமீபத்திய உத்தியுடன் ஒத்துப்போகிறது.

புத்தாண்டில் அறிமுகமாகும் புதிய ஸ்மார்ட்போன் - ரியல்மி நியோ 8 (Realme Neo 8) மாடல் ஆகும். டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் பகிர்ந்து கொண்ட தகவலின்படி, ரியல்மி நியோ 8 ஸ்மார்ட்போனானது ஜனவரி 2026 இல் சீனாவில் அறிமுகம் செய்யப்படலாம். ஆனால் குறிப்பிட்ட டிப்ஸ்டர் சரியான வெளியீட்டு தேதியை பறி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
ரியல்மி நியோ 8 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இந்த ஸ்மார்ட்போன் குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட்டால் இயக்கப்படலாம். இந்த சிப்செட் - பிளாக்ஷிப் பெர்பார்மென்ஸை உறுதி செய்யும். டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 1.5கே ரெசல்யூஷன் உடனான பிளாக் ஆன சாம்சங் AMOLED LTPS டிஸ்பிளேவையும், அதில் அல்ட்ராசோனிக் இன்-ஸ்கிரீன் பிங்கர் பிரிண்ட் சென்சாரையும் கொண்டிருக்கலாம்
சாஃப்ட்வேரை பொறுத்தவரை இது ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான ரியல்மி யுஐ 7 ஓஎஸ் உடன் அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி திறன் - மற்றொரு சிறப்பம்சமாக இருக்கும் என்பது போல் தெரிகிறது. ரியல்மி நியோ 8 ஸ்மார்ட்போன் ஆனது சுமார் 8000mAh சிங்கிள் செல் பேட்டரி உடன் வரும் என்று கூறப்படுகிறது
இந்த பேட்டரி அதன் முன்னோடியை (ரியல்மி நியோ 7 மாடலை) விட குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இருக்கும். வடிவமைப்பை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் கிளாஸ் பேக் உடன் இணைக்கப்பட்ட மெட்டல் ஃபிரேம் உடன் வரலாம். தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 மற்றும் IP69 ரேட்டிங் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. விலையை பொறுத்தவரை ரியல்மி நியோ 8 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.30,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம்.
ஒட்டுமொத்தமாக பிளாக்ஷிப் சிப்செட், பெரிய பேட்டரி மற்றும் பிரீமியம் பில்ட் உடன் ரியல்மி நியோ 8 ஸ்மார்ட்போன் ஆனது சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒன்பிளஸ் ஏஸ் 6டி (OnePlus Ace 6T) மற்றும் வரவிருக்கும் மோட்டோ எக்ஸ்70 அல்ட்ரா (Moto X70 Ultra) மற்றும் ஐக்யூ இஸட்11 டர்போ (iQOO Z11 Turbo) உள்ளிட்ட பெர்பார்மென்ஸ் சார்ந்த ஸ்மார்ட்போன்களுடன் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோட்டோ எக்ஸ்70 அல்ட்ரா மற்றும் ஐக்யூ இஸட்11 டர்போ ஆகிய இரண்டுமே வருகிற 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சீனாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரியல்மி நிறுவனம் ஆனது "வெறுமனே" ரியல்மி நியோ 8 மாடல் உடன் நிறுத்திக்கொள்ள போவது இல்லை.
மாறாக ரியல்மி நிறுவனம் அதன் ரியல்மி நியோ 8 சீரீஸின் கீழ் ரியல்மி நியோ 8 டர்போ (Realme, Neo 8 Turbo), டைமன்சிட்டி 8500 சிப்செட் கொண்டு இயங்கும் ரியல்மி நியோ 8 எஸ்இ (Realme Neo 8 SE) மற்றும் ரியல்மி நியோ 8எக்ஸ் (Realme Neo 8x) உள்ளிட்ட பல மாடல்களை அறிமுகப்படுத்தக்கூடும் என்றும், இவைகள் எல்லாமே 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் அறிமுகம் செய்யப்படும்படி திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








