வெச்சி செஞ்சிட்டாங்க.. 8000mAh பேட்டரி.. 165Hz OLED டிஸ்பிளே.. 80W சார்ஜிங்.. புது Realme போன்.. எந்த மாடல்?
ரியல்மி நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 (Snapdragon 8 Gen 5) சிப்செட் கொண்ட மாடலாக ரியல்மி நியோ 8 (Realme Neo 8) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 165Hz ஓஎல்இடி டிஸ்பிளே, 80W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் கிடைக்க உள்ளது. இந்த ரியல்மி நியோ 8 போனின் அறிமுகம், பீச்சர்கள் உள்ளிட்ட விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
கேமிங் மாடல்களாக நியோ சீரிஸ் வெளியாகி வருகின்றன. முன்னதாக ரியல்மி நியோ 7 (Realme Neo 7) ஸ்மார்ட்போன் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆகவே, 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்த ரியல்மி நியோ 8 ஸ்மார்ட்போன் வெளியாகும் என்று ரியல்மி விரும்பிகள் எதிர்பார்த்தனர். ஆனால், வெளியீடு தொடர்பான அறிவிப்பு வரவில்லை.

ஆனால், இப்போது ரியல்மி நிறுவனமே ரியல்மி நியோ 8 ஸ்மார்ட்போனின் டிசைன் மற்றும் சிப்செட்டை உறுதி செய்துள்ளது. சைபர் பர்பிள் (Cyber Purple) கலர் பேக் பேனல், டிரான்ஸ்பரன்ட் கேமரா டெகோ மற்றும் டிரிபிள் ரியர் கேமரா (Triple Rear Camera) கொண்டுள்ளது. 120X ஜூமிங் கிடைத்துள்ளது. ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட் கொண்ட மாடலாக அறிமுகமாக உள்ளது.
மெட்டல் மிடில் ஃபிரேம் கிடைத்துள்ளது. ஆகவே, இந்த ஜனவரி மாதத்திலேயே ரியல்மி நியோ 8 ஸ்மார்ட்போன் வெளியாக உள்ளது. இதை உறுதி செய்யும்படி பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், டிஸ்பிளே, ஐபி ரேட்டிங் உள்ளிட்ட பீச்சர்கள் வெளியாகி உள்ளன. பர்ஃபாமென்ஸ் மாடலாக மட்டுமல்லாமல், பேட்டரி பேக்கப்பிலும் இந்த ரியல்மி நியோ 8 மிரளவிட உள்ளது.
ரியல்மி நியோ 8 அம்சங்கள் (Realme Neo 8 Specifications): 6.78 இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளேவை இந்த ரியல்மி நியோ 8 ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. மேலும், 1.5K ரெசொலூஷன் மற்றும் 165 Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது. அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic In-display Fingerprint Sensor) கிடைத்துள்ளது. 8000mAh பேட்டரியை கொண்டுள்ளது.
மேலும், 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைத்துள்ளது. இந்த பீச்சர்களுடன் விலை குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், ரியல்மி நியோ 7 ஸ்மார்ட்போனின் விலையில் இருந்து கொஞ்சம் கூடுதாக இருக்கும் என்பதை அடித்து சொல்லலாம். ஆகவே, அந்த போனை பார்க்கலாம்.
ரியல்மி நியோ 7 அம்சங்கள் (Realme Neo 7 Specifications): ஆக்டா கோர் டைமன்சிட்டி 9300+ 4என்எம் (Octa-Core Dimensity 9300+ 4nm) சிப்செட்டை இந்த ரியல்மி நியோ 7 போன் கொண்டுள்ளது. 6.78 (2780 x 1264 பிக்சல்கள்) ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும், 120 Hz ரெஃப்ரெஷ் ரேட், 360 Hz டச் சாம்பிளிங் ரேட், 2600Hz டிம்மிங் மற்றும் 6000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுத்துள்ளது.
50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா உள்ளது. 16 எம்பி செல்பீ கேமரா உள்ளது. IP68 + IP69 ரேட்டிங் உள்ளது. 7000mAh மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. 12 ஜிபி ரேம் +256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.25,000 பட்ஜெட்டில் இருக்கிறது. இது சீன விலையாகும். ஆகவே, ரியல்மி நியோ 8 போனின் ஆரம்ப விலை ரூ.30,000 பட்ஜெட்டில் இருக்கும்.


Click it and Unblock the Notifications








