Home
Mobile

காஸ்ட்லீ OnePlus ஓரம்போ.. அதே 8000mAh பேட்டரி, அதே சிப் உடன் புது Realme 5ஜி போன்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் 15-க்கு அடுத்தபடியாக 8000mAh பேட்டரி கொண்ட ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் அதே 8000mAh பேட்டரி மற்றும் ஒன்பிளஸ் 15ஆர் மாடலில் இடம்பெறவுள்ள அதே சிப்செட் உடன் புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் ஒன்றும் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது!

எந்த மாடல்? அது ரியல்மி நியோ 8 (Realme Neo 8) ஸ்மார்ட்போன் ஆகும். ரூ.72,999 க்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒன்பிளஸ் 15 க்கு போட்டியாக அதே விலைக்கு (ரூ.72,999) ரியல்மி ஜிடி 8 ப்ரோ (Realme GT 8 Pro) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. ஆக ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக ரியல்மி நியோ 8 அறிமுகம் செய்யப்படுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

என்னென்ன அம்சங்கள்? இது அல்ட்ராசோனிக் இன்-ஸ்கிரீன் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் உடனான 6.78-இன்ச் பிளாட் ஓஎல்இடி எல்டிபிஸ் 1.5கே ரெசல்யூஷன் டிஸ்பிளே மற்றும் 50-மெகாபிக்சல் பிரைமரி கேமராவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுவாரசியமாக ரியல்மி நியோ 8 ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட்டால் இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இது - ஒன்பிளஸ் ஏஸ் 6டி / ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனில் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் அதே சிப்செட் ஆகும். மேலும் ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சமாக எதிர்பார்க்கப்படும் 8000mAh பேட்டரி ஆனது ரியல்மி நியோ 8 மாடலிலும் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன விலை? ரியல்மி நியோ 8 ஸ்மார்ட்போனின் விலை ரூ.30,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ரூ.29,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம். இந்த இடத்தில் ஒன்பிளஸ் 15ஆர் ஆனது இந்தியாவில் ரூ.44,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

எப்போது அறிமுகமாகும்? ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனின் சைனீஸ் வேரியண்ட் ஆன ஒன்பிளஸ் ஏஸ் 6டி (OnePlus Ace 6T) விரைவில் (இந்த மாதமே) சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதால்.. ரியல்மி நியோ 8 மாடலும் விரைவில் சீனாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீன அறிமுகத்தை தொடர்ந்து இந்திய சந்தைக்கும் வருமென்பதில் சந்தேகமே வேண்டாம்.

ரியல்மி நியோ 8 சீரிஸின் கீழ் வேறு என்னென்ன மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம்? ரியல்மி நியோ 8 சீரிஸில் ரியல்மி நியோ 8 உடன் சேர்ந்து ரியல்மி நியோ 8எக்ஸ் (Realme Neo 8x), ரியல்மி நியோ 8 எஸ்இ (Realme Neo 8 SE) மற்றும் ரியல்மி நியோ 8 டர்போ (Realme Neo 8 Turbo) ஆகிய மாடல்களும் அறிமுகம் செய்யப்படலாம்.

நவம்பர் 25 முதல் விற்பனைக்கு வரும் ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.72,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் அதே விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.78,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரியல்மி ஜிடி 8 ப்ரோ உடன் சேர்ந்து ரியல்மி ஜிடி 8 ப்ரோ ட்ரீம் எடிஷனும் (Realme GT 8 Pro Dream Edition) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.79,999 முதல் தொடங்குகிறது. இரண்டு வேரியண்ட்களுமே நவம்பர் 25 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 29 ஆம் தேதி வரை வாங்க கிடைக்கும்.

ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.79 இன்ச் க்யூஎச்டி பிளஸ் அமோஎல்இடி ப்ளெக்சிபில் டிஸ்பிளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- 50-மெகாபிக்சல் (எப்/1.8) ரிக்கோ ஜிஆர் ஆன்டி-கிளேர் ப்ரைமரி கேமரா
- 50-மெகாபிக்சல் (எப்/2.0) அல்ட்ராவைடு கேமரா
- 120எக்ஸ் டிஜிட்டல் ஜூமிங் உடனான 200-மெகாபிக்சல் (எப்/2.6) டெலிஃபோட்டோ கேமரா
- 32-மெகாபிக்சல் (எப்/2.4) செல்பீ கேமரா
- 120W மற்றும் 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 7000mAh பேட்டரி.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme Neo 8 With 8000mAh Battery Snapdragon 8 Gen 5 Launching Soon New OnePlus 15R Competitor
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X