தலைவன் பழையபடி ஆரம்பிச்சுட்டான்.. பேக் டூ பேக் புது போன்கள்.. 8000mAh உடன் புதிய Realme போன்!
பழைய ரியல்மி திரும்புவது போல் தெரிகிறது. அதாவது "பேக்-டூ-பேக் பாணியில்" புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் ரியல்மி நிறுவனம் மீண்டும் அதை செய்யவுள்ளது போல் தெரிகிறது.ரியல்மி நிறுவனம் அதன் ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனை வருகிற நவம்பர் 20 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.
இந்நிலையில் ரியல்மி அதன் நியோ சீரிஸின் கீழ் ஒரு புதிய ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது ரியல்மி நியோ 8 (Realme Neo 8) ஸ்மார்ட்போன் ஆகும். இது கடந்த டிசம்பர் 2024 இல் அறிமுகமான ரியல்மி நியோ 7 (Realme Neo 7) ஸ்மார்ட்போனின் அப்கிரேடட் வெர்ஷன் ஆக இருக்கும்.

நம்பகமான டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக ரியல்மி நியோ 7 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் லீக் செய்யப்பட்டு உள்ளன. கிடைத்த விவரங்கள் உண்மையாக இருந்தால், ரியல்மி நியோ 8 ஸ்மார்ட்போன் அதன் முன்னோடியை விட பேட்டரி மற்றும் செயல்திறன் அடிப்படையில் குறிப்பிடத்தக்க மேம்பாடுகளை வழங்கக்கூடும்.
ஏனென்றால் ரியல்மி நியோ 8 ஸ்மார்ட்போன் ஆனது 8000mAh க்கும் அதிகமான சிலிக்கான்-கார்பன் பேட்டரி மற்றும் இன்னும் அறிவிக்கப்படாத ஸ்னாப்டிராகன் சிப்பை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. அது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட் (Snapdragon 8 Gen 5 chipset) ஆகும்.
மேலும் ரியல்மி நியோ 8 ஸ்மார்ட்போனில் 1.5கே ரெசல்யூஷன் உடனான 6.78 இன்ச் எல்டிபிஸ் பிளாட் டிஸ்பிளே இடம்பெறலாம் என்றும் கூறப்படுகிறது. கூடவே இந்த ஸ்மார்ட்போனில் 3டி அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரும் இருக்கலாம். கேமராக்களை பொறுத்தவரை ரியர் கேமராவில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா இருக்கலாம்.
முன்னதாக அறிமுகமான ரியல்மி நியோ 7 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.78-இன்ச் 8டி எல்பிடிஓ டிஸ்பிளே
- ஆக்டாகோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9300 பிளஸ் சிப்செட்
-16GB வரை ரேம் மற்றும் 1டிபி வரை ஸ்டோரேஜ்
- டூயல் ரியர் கேமரா
- 50-மெகாபிக்சல் + 8-மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் சென்சார்
- 16-மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 7700 சதுர மிமீ விசிசிஸ்டம்
- இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 7000mAh பேட்டரி
- 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 + IP69 ரேட்டிங்
நவம்பர் 20 இந்தியாவில் அறிமுகமாகும் ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.79-இன்ச் QHD+ (1440 x 3136 பிக்சல்ஸ்) AMOLED பிளெக்சிபில் டிஸ்பிளே
- 7000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- 144ஹெர்ட்ஸ் வரை ரெஃப்ரெஷ் ரேட்
- 1.07 பில்லியன் கலர்ஸ்
- 508 பிபிஐ பிக்சல் டென்சிட்டி
- 3200 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்
- 100 சதவீதம் DCI-P3 கலர் கேமட்
- 100 சதவீதம் sRGB ஆதரவு
- குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- 16GB வரை LPDDR5X ரேம் மற்றும் 1TB வரை UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ட்ரிபிள் ரியர் கேமரா
- டூ ஆக்சிஸ் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS), 22மிமீ குவிய நீளம் கொண்ட 50-மெகாபிக்சல் (எப்/1.8) Ricoh GR ஆன்டி-கிளேர் ப்ரைமரி கேமரா
- 50 மெகாபிக்சல் (எப்/2.0) அல்ட்ராவைடு கேமரா
- 120எக்ஸ் டிஜிட்டல் ஜூம் திறன்களை கொண்ட 200-மெகாபிக்சல் (எப்/2.6) டெலிஃபோட்டோ கேமரா
- 32 மெகாபிக்சல் (எப்/2.4) செல்பீ கேமரா
- 30 fps இல் 8கே வீடியோ ரெக்கார்டிங்
- 120W மற்றும் 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 7000mAh பேட்டரி


Click it and Unblock the Notifications








