Home
Mobile

போக்கோ, மோட்டோவுக்கு அப்பன்.. 8000mAh பேட்டரி போனை களத்தில் இறக்கி விட்ட Realme.. எந்த மாடல்?

ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி நியோ 8 ஸ்மார்ட்போனை தற்போது சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. 8000mAh பேட்டரி, ஐபி69 ரேட்டிங், ஸ்னாப்டிராகன் சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த போன் விரைவில் இந்தியாவிலும் அறிமுகமாகும் எனக் கூறப்படுகிறது. இப்போது இந்த போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

ரியல்மி நியோ 8 அம்சங்கள் (Realme Neo 8 Specifications): 6.78-இன்ச் பிளாட் சாம்சங் எம்14 எல்டிபிஎஸ் ஒஎல்இடி டிஸ்பிளே உடன் இந்த புதிய ரியல்மி போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (165Hz refresh rate), 6500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 3,800Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் (Instant Touch Sampling Rate), டிசி டிம்மிங், கிரிஸ்டல் ஆர்மர் கிளாஸ் (Crystal Armor Glass) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

8000mAh பேட்டரி போனை களத்தில் இறக்கி விட்ட Realme.. எந்த மாடல்?

ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 (Octa Core Snapdragon 8 Gen 5 ) சிப்செட் உடன் இந்த புதிய ரியல்மி நியோ 8 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த அட்டகாசமான ரியல்மி ஸ்மார்ட்போனில் உள்ளன.

ரியல்மி யுஐ 7.0 (realme UI 7.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதள வசதியுடன் இந்த ரியல்மி போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் 16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி ஆதரவு இந்த போனில் உள்ளது.

50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்896 மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த ரியல்மி போன். அதுவும் இந்த ஸ்மார்ட்போனின் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

3டி அல்ட்ராசோனிக் இன் டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (3D Ultrasonic In-display Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) உள்ளிட்ட வசதிகளுடன் ரியல்மி நியோ 8 போன் வெளிவந்துள்ளது.

IP66, IP68, மற்றும் IP69 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு ரேட்டிங் பெற்றுள்ளது ரியல்மி நியோ 8 மாடல். 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 பிஇ, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ரியல்மி போனில் உள்ளன.

8000mAh பேட்டரி உடன் ரியல்மி நியோ 8 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆகவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு அல்லது மூன்று நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

ரியல்மி நியோ 8 விலை

12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நியோ 8 மாடலின் விலை 2599 yuan (இந்திய மதிப்பில் ரூ.34,180)
16ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நியோ 8 மாடலின் விலை 2899 yuan (இந்திய மதிப்பில் ரூ.38,125)
12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நியோ 8 மாடலின் விலை 3099 yuan (இந்திய மதிப்பில் ரூ.40,760)
16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நியோ 8 மாடலின் விலை 3399 yuan (இந்திய மதிப்பில் ரூ.44,710)
16ஜிபி ரேம் + 1டிபி மெமரி கொண்ட ரியல்மி நியோ 8 மாடலின் விலை 3899 yuan (இந்திய மதிப்பில் ரூ.51,290)

More from GizBot

Best Mobiles in India

English summary
realme Neo 8 with 8000mAh battery launched in China: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X