ஒட்டுமொத்த மார்கெட்.. ஒத்த போனுக்கு வெயிட்டிங்.. 8000mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?
ரியல்மி நிறுவனத்தின் மிட்-ரேஞ்ச் மாடலான ரியல்மி நியோ 8 (Realme Neo 8) ஸ்மார்ட்போன் மார்கெட்டில் களமிறங்க இருக்கிறது. இந்த வெளியீடு உறுதியாகியதை தொடர்ந்து 8000mAh பேட்டரி, 100W ஃபாஸ்ட் சார்ஜிங், ஓஎல்இடி டிஸ்பிளே உள்ளிட்ட பீச்சர்கள் மார்கெட்டில் வெளியாகி இருக்கின்றன. இந்த ரியல்மி நியோ 8 ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை பார்க்கலாம்.
சீன மார்கெட்டில் இந்த மாதத்துக்குள் ரியல்மி நியோ 8 (Realme Neo 8) வெளியாக இருப்பதை ரியல்மி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. ஆகவே, ஓரிரு வாரங்களில் வெளியீட்டு நிகழ்வு இருக்கும். ஆனால், இதற்கு முன்னதாகவே முழு பீச்சர்களும் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் மூலமாக தெரியவந்துள்ளது. இதில் அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களை பார்க்க முடிகிறது.

ரியல்மி நியோ 8 அம்சங்கள் (Realme Neo 8 Specifications): 6.78 இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன் கிடைக்கிறது. இந்த எல்டிபிஎஸ் (LTPS) டிஸ்பிளே மாடலில் 3டி அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (3D Ultrasonic in-display Fingerprint Sensor) கிடைக்கிறது. மெட்டல் மிடில் ஃபிரேம் கொண்ட மாடலாக வெளியாக இருக்கிறது.
ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) பேஸ்டு யுஐ 7 (Realme UI 7) கிடைக்க இருக்கிறது. முந்தைய மாடலை போலவே பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 எஸ்ஓசி (Qualcomm Snapdragon 8 Gen 5 SoC) கிடைக்கிறது. கேமிங் பேக்கப் கொடுக்கும்படி 8000mAh பேட்டரி வருகிறது. 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட இருக்கிறது.
இந்த ரியல்மி நியோ 8 ஸ்மார்ட்போனில் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்க இருக்கிறது. IP68 ரேட்டிங் மட்டுமல்லாமல், IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்க இருக்கிறது. இந்த பீச்சர்களுடன் ரூ.30,000 பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம். ஏனென்றால், முன்னதாக வெளியான ரியல்மி நியோ 7 ஸ்மார்ட்போன் ரூ.25,000 பட்ஜெட்டில் கிடைத்தது.
ரியல்மி நியோ 7 அம்சங்கள் (Realme Neo 7 Specifications): கிரிஸ்டல் ஆர்மர் கிளாஸ் (Crystal Armor Glass) பாதுகாப்பு கொண்ட 6.78 இன்ச் (2780 x 1264 பிக்சல்கள்) ஓஎல்இடி டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவானது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 6000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 2600Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 900பிளஸ் 4என்எம் (Octa Core Dimensity 9300+ 4nm) சிப்செட் மட்டுமல்லாமல், இம்மார்டலிஸ் ஜி720 ஜிபியு (Immortalis G720 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) கிடைக்கிறது. 50 மெகா பிக்சல் மெயின் கேமரா + 8 மெகா பிக்சல் அல்ட்ரா வைடு கேமராவுடன் டூயல் ரியர் செட்டப் உள்ளது.
சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சார் மற்றும் ஓஐஎஸ் டெக்னாலஜி (OIS Technology) கிடைக்கிறது. 16 மெகா பிக்சல் செல்பீ கேமராவிலும் சோனி சென்சார் உள்ளது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7000mAh பேட்டரி உள்ளது. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் உள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ உள்ளது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடல் ரூ.25,000 பட்ஜெட்டில் வெளியாகியது.


Click it and Unblock the Notifications








