Home
Mobile

மார்க்கெட்டே மிரள போகுது.. 8000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. புது ரியல்மி 5ஜி போன் ரெடி.. எந்த மாடல்?

ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி நியோ 8 (Realme Neo 8) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதாவது தற்போது வெளியான தகவலின்படி, வரும் டிசம்பர் மாதம் இந்த புதிய ரியல்மி நியோ 8 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போனின் அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ரியல்மி நியோ 8 அம்சங்கள் (Realme Neo 8 Specifications): 6.78-இன்ச் எல்டிபிஎஸ் ஒஎல்இடி டிஸ்பிளே உடன் ரியல்மி நியோ 8 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில்1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

மார்க்கெட்டே மிரள போகுது..புது ரியல்மி 5ஜி போன் ரெடி.. எந்த மாடல்?

அதேபோல் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 (Snapdragon 8 Gen 5) சிப்செட் உடன் ரியல்மி நியோ 8 ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதாவது இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

ரியல்மி நியோ 8 ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி மெயின் கேமரா உள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அட்டகாசமான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (in-display ultrasonic fingerprint sensor) வசதியுடன் ரியல்மி நியோ 8 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் இந்த போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த ரியல்மி நியோ 8 ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் இந்த புதிய ரியல்மி நியோ 8 ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரியல்மி நிறுவனம்.

8000எம்ஏஎச் பேட்டரி உடன் ரியல்மி நியோ 8 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றி கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-ச் போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் ரியல்மி நியோ 8 ஸ்மார்ட்போனில் உள்ளன. அதுவும் 16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவும் இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போனில் உள்ளது. அதேபோல் இந்த போன் சற்று உயர்வான விலையில் வெளியாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme Neo 8 specifications leaked online: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X