OnePlus 15R-க்கு வில்லன்.. 8000mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. SD 8 ஜென் 5 சிப்.. மிரளவிட்ட Realme Neo 8 போன்!
ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக மட்டுமல்லாமல், அந்த மாடலை தூக்கி சாப்பிடும்படியான பேட்டரி பீச்சர்களுடன் ரியல்மி நியோ 8 (Realme Neo 8) ஸ்மார்ட்போன் அறிமுகமாக இருக்கிறது. ஏற்கனவே, பீச்சர்கள் வெளியாகியன. இப்போது, சிப்செட், பேட்டரி பீச்சர்கள் மீண்டும் வெளியாகி இருக்கிறது. இந்த ரியல்மி நியோ 8 ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Gen 5 3nm) சிப்செட் கொண்ட முதல் மாடலாக ஒன்பிளஸ் 15ஆர் (OnePlus 15R) ஸ்மார்ட்போன் இந்திய மார்கெட்டில் வெளியாகிவிட்டது. இதற்கு முன்னதாகவே, ஒன்பிளஸ் ஏஸ் 6டி (OnePlus Ace 6T) மாடலாக சீன மார்கெட்டில் வெளியாகிவிட்டது. அங்கும் இந்த சிப்செட் கொண்ட முதல் மாடலாக இது இருக்கிறது.

ஆகவே, போட்டிக்கு எந்த ஸ்மார்ட்போனும் இல்லையா என்னும் கேள்வி எழுந்தது. இப்போது, அந்த இடத்தை ரியல்மி நியோ 8 ஸ்மார்ட்போன் பிடிக்க இருக்கிறது. சீன மார்கெட்டில் ஒன்பிளஸ் ஏஸ் 6டி ஸ்மார்ட்போன் வெளியானபோதே இந்த நியோ 8 மாடலில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட் கிடைக்க இருப்பது டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக தெரியவந்தது.
மேலும், ஒன்பிளஸ் ஏஸ் 6டி ஸ்மார்ட்போனை தூக்கி சாப்பிடும்படி அதைவிட கூடுதல் பேட்டரி கேபாசிட்டி கிடைக்க இருப்பதையும் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் டிப் வழியாக தெரியவந்தது. இப்போது, இந்தியாவில் ஒன்பிளஸ் 15ஆர் வெளியான அடுத்த நாளில் மீண்டும் ரியல்மி நியோ 8 மாடலில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட் கிடைக்கும் என்பது வெளியாகி இருக்கிறது.
இதையும் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் தெரிவித்துள்ளது. மேலும், அல்ட்ரா சோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், ஃபுல் லெவல் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் மற்றும் 8K பேட்டரி கிடைக்க இருப்பதும் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் குறிப்பிட்டுள்ளது. ஏற்கனவே, இந்த ரியல்மி நியோ 8 ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன. இதை பார்ப்போம்.
ரியல்மி நியோ 8 அம்சங்கள் (Realme Neo 8 Specifications): ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட்டுடன் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்டுள்ளது. ரியல்மி யுஐ 7 (Realme UI 7) இந்த ரியல்மி நியோ 8 ஸ்மார்ட்போனில் வருகிறது. 1.5K ரெசொலூஷன் கொண்ட 6.78 இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. 3டி அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் வருகிறது.
100W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 8000mAh பேட்டரியை கொடுக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. IP68 ரேட்டிங், IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொண்டுள்ளது. மெட்டல் மிடில் ஃபிரேம் நியோ போன்களுக்கு வரும் கேமிங்-லைக் டிசைனில் கிடைக்க இருக்கிறது. ரூ.30,000 பட்ஜெட்டில் வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனின் விலையை விட மலிவாகும். ஏனென்றால், அந்த ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.47,999 பட்ஜெட்டில் இருக்கிறது. 7400mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கிறது. சோனி சென்சார் மற்றும் ஓஐஎஸ் டெக்னாலஜி கொண்ட 50 எம்பி பிரைமரி கேமராவை கொடுத்துள்ளது.
மேலும், 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 32 எம்பி செல்பீ கேமராவும் உள்ளது. இதில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் கொண்ட 6.83 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் மற்றும் ஆக்ஸிஜன் ஓஎஸ் 16 கிடைக்கிறது. இதேபோல பீச்சர்களை ரியல்மி நியோ 8 மாடலில் எதிர்பார்க்கலாம். ஆனால், விலை கம்மியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








