எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள புதிய Realme 5ஜி போன்.. 8000mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
ரியல்மி நிறுவனம் வரும் ஜனவரி 12-ம் தேதி சீனாவில் ரியல்மி நியோ 8 (Realme Neo 8) எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமான சில நாட்களில் இந்தியா மற்றும் உலக நாடுகளில் ரியல்மி ஜிடி 8 (Realme GT 8) எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாக இந்த புதிய ரியல்மி நியோ 8 ஸ்மார்ட்போன் அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் வெளியான இந்த ரியல்மி நியோ 8 ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ரியல்மி நியோ 8 அம்சங்கள் (Realme Neo 8 Specifications): 6.8-இன்ச் பிளாட் சாம்சங் அமோலெட் (Samsung AMOLED) டிஸ்பிளே வசதியுடன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (165Hz refresh rate), 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 (Qualcomm Snapdragon 8 Gen 5) சிப்செட் உடன் இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் அட்ரினோ 829 ஜிபியு (Adreno 829 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த அட்டகாசமான ரியல்மி நியோ 8 ஸ்மார்ட்போனில் உள்ளன.
50எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா என்கின ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது ரியல்மி நியோ 8 ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனின் டெலிபோட்டோ கேமராவில் 120X ஜூமிங் ஆதரவும் மேலும் இந்த ரியர் கேமராக்கள் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா உடன் ரியல்மி நியோ 8 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த புதிய ரியல்மி நியோ 8 ஸ்மார்ட்போனில் உள்ளது.
3டி அல்ட்ராசோனிக் இன் டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (3D Ultrasonic In-display Fingerprint Sensor)உடன் இந்த ரியல்மி போன் வெளிவரும். மேலும் IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவும் இந்த போனில் உள்ளது.

யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers) உள்ளிட்ட வசதிகள் இந்த புதிய ரியல்மி நியோ 8 ஸ்மார்ட்போனில் உள்ளது. மேலும் 24ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி ஆதரவுடன் இந்த புதிய ரியல்மி நியோ 8 ஸ்மார்ட்போனில் உள்ளது.
8000mAh பேட்டரி உடன் ரியல்மி நியோ 8 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, டூயல் 5ஜி வோல்ட்இ, வைஃபை 7, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், குளோனஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய போனில் உள்ளன. மேலும் இந்த போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
Image Credit: Realme, Weibo


Click it and Unblock the Notifications








