Home
Mobile

இப்படியொரு போனுக்கு தான் வெயிட்டிங்.. 7000mAh பேட்டரி.. சோனி கேமரா.. 512ஜிபி மெமரி.. எந்த மாடல்?

ரியல்மி நிறுவனம் அடுத்து ரியல்மி நியோ 7 எஸ்இ (Realme Neo 7 SE) எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த புதிய போனின் மாடல் நம்பர் RMX5080 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் வாரங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ரியல்மி நியோ 7 எஸ்இ போனின் படங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் ஆன்லைனில் கசிந்துள்ளது.

அதாவது ரியல்மி நியோ 7 எஸ்இ ஸ்மார்ட்போன் ஆனது டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே (Punch-Hole Display)வசதியும் இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

இப்படியொரு போனுக்கு தான் வெயிட்டிங்.. 7000mAh பேட்டரி.. எந்த மாடல்?

ரியல்மி நியோ 7 எஸ்இ அம்சங்கள் (Realme Neo 7 SE Specifications): 1.5கே ரெசல்யூஷன் கொண்ட ஒஎல்இடி டிஸ்பிளே உடன் ரியல்மி நியோ 7இ ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. ஒஎல்இடி டிஸ்பிளே என்பதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சக்திவாய்ந்த டைமன்சிட்டி 8400-மேக்ஸ் (Dimensity 8400-Max chip) சிப்செட் உடன் இந்த ரியல்மி நியோ 7 எஸ்இ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் கேமிங் சிப் இந்த போனில் இருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Realme UI 6 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த ரியல்மி நியோ 7 எஸ்இ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதி மற்றும் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ள ரியல்மி நிறுவனம்.

50எம்பி Sony IMX882 மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி நியோ 7 எஸ்இ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா உடன் இந்த போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

இப்படியொரு போனுக்கு தான் வெயிட்டிங்.. 7000mAh பேட்டரி.. எந்த மாடல்?

இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் ரியல்மி நியோ 7 எஸ்இ ஸ்மார்ட்போனில் உள்ளன. அதேபோல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் ( In-display Fingerprint Sensor) வசதி இந்த போனில் உள்ளது. குறிப்பாக இந்த போன் 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவுடன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

7000mAh பேட்டரி உடன் ரியல்மி நியோ 7 எஸ்இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆன்லைனில் வெளியான தகவலின்படி ரியல்மி நியோ 7 எஸ்இ போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

photo credit: TENAA,kryinternational

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme Neo 7 SE images and specifications leaked online: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X