Home
Mobile

மார்க்கெட்ல புயலை கிளப்ப போகுது.. OLED டிஸ்பிளே. 120W சார்ஜிங்.. வருகிறது ரியல்மி போன்.. எந்த மாடல்?

இந்தியாவில் சியோமி, விவோ, மோட்டோ போன்களை விட ரியல்மி நிறுவனத்தின் போன்களுக்கு தான் அதிக வரவேற்பு உள்ளது. காரணம் என்னவென்றால் சிறந்த தரமான மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் ரியல்மி போன்கள் வெளிவருகின்றன. எனவே தான் இந்தியாவில் ரியல்மி போன்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்நிலையில் ரியல்மி நிறுவனம் ரியல்மி நியோ 7 ப்ரோ எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரியல்மி நியோ 7 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது முதலில் சீனாவில் தான் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதன்பின்பு இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் இந்த போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இப்போது ஆன்லைனில் கசிந்த ரியல்மி நியோ 7 ப்ரோ போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

மார்க்கெட்ல புயலை கிளப்ப போகுது.. வருகிறது ரியல்மி போன்.. எந்த மாடல்?

ரியல்மி நியோ 7 ப்ரோ அம்சங்கள் (Realme Neo 7 Pro Specification): 1.5K ரெசல்யூஷன் (1.5K resolution) கொண்ட குவாட் கர்வ்ட் ஓஎல்இடி (Quad Curved OLED display)உடன் இந்த ரியல்மி நியோ 7 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின டிஸ்பிளே.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Qualcomm Snapdragon 8 Elite chipset) உடன் ரியல்மி நியோ 7 ப்ரோ போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. பின்பு 6500எம்ஏஎச் பேட்டரி, 120W ஃபாஸ்ட் சார்ஜிங், ட்ரிபிள் ரியர் கேமராக்கள் எனப் பல்வேறு சிறப்பான அம்சங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக ரியல்மி நியோ 7 ப்ரோ போனின் சில அம்சங்கள் மட்டுமே தற்போது வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் இந்த போனின் அனைத்து அம்சங்களும் வெளிவரும். மேலும் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி 14எக்ஸ் 5ஜி (realme 14X 5G) போனின அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

ரியல்மி 14எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Realme 14x 5G specifications): ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் உடன் ரியல்மி 14எக்ஸ் 5ஜி வெளிவந்தது. மேலும் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த ரியல்மி போன்.

அதேபோல் 6.7-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த ரியல்மி 14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 720×1604 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

50எம்பி ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. அதேபோல் realme UI 5.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த ரியல்மி 14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

குறிப்பாக சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) கொண்டுள்ளது இந்த புதிய ரியல்மி 14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் அல்ட்ரா லீனியர் பாட்டம்-போர்டெட் ஸ்பீக்கர் (Ultra Linear Bottom-ported Speaker)வசதியும் இந்த போனில் உள்ளது. எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும்.

மார்க்கெட்ல புயலை கிளப்ப போகுது.. வருகிறது ரியல்மி போன்.. எந்த மாடல்?

மேலும் 6000mAh பேட்டரி உடன் ரியல்மி 14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

அதேபோல் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்றகனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ரியல்மி 14எக்ஸ் 5ஜி போனில் உள்ளன. பின்பு இந்தியாவில் ரியல்மி 14எக்ஸ் 5ஜி போன் ஆனது ரூ.14,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme Neo 7 Pro specifications leaked online: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X