Home
Mobile

ஜூலை 7 வரை மட்டுமே.. அதுக்கு அப்புறம் இந்த 5 Realme போன்களும் இவ்ளோ கம்மியா கிடைக்காது.. ரூ.4000 டிஸ்கவுண்ட்!

அடுத்த அமேசான் ப்ரைம் டே சேல் (Amazon Prime Day Sale 2024) ஆனது ஜூலை 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் நடக்கவுள்ள நிலையில், அதே அமேசான் இந்தியா வலைத்தளம் வழியாக ரியல்மி (Realme) நிறுவனம் அதன் 5 நார்சோ சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் மீதான பிரத்யேக சிறப்பு விற்பனை ஒன்றை "சைலன்ட் ஆக" நடத்திவருகிறது. ஜூலை 3 ஆம் தேதி தொடங்கி ஜூலை 7 ஆம் தேதி வரையிலாக நடக்கவுள்ள இந்த சிறப்பு விற்பனைக்கு நார்சோ வீக் (Narzo Week) என்று பெயரிடப்பட்டு உள்ளது.

நார்சோ வீக் சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக.. நார்சோ சீரிஸின் கீழ் வெளியாகி டாப் ரேட்டிங்கை பெற்ற 5 மாடல்கள் மீது.. கூப்பன் ஆபர் உட்பட ரூ.4000 வரையிலான தள்ளுபடி கிடைக்கிறது. அந்த 5 ஸ்மார்ட்போன்களின் மாடல் பெயர்கள் என்னென்ன? அவைகளின் அசல் விலை என்ன? ஆபர் விலை என்ன? இதோ விவரங்கள்:

ஜூலை 7-க்கு பிறகு இந்த 5 Realme போன்களும் இவ்ளோ கம்மியா கிடைக்காது!

1. ரியல்மி நார்சோ 70 ப்ரோ 5ஜி (Relame Narzo 70 Pro 5G): அமேசான் இந்தியா வலைத்தளத்தில், தற்போது இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.4000 தள்ளுபடியை (கூப்பன் ஆபர் உட்பட) பெற்று ரூ.15,999 க்கு வாங்க கிடைக்கிறது.

2. ரியல்மி நார்சோ 70எக்ஸ் 5ஜி (Relame Narzo 70X 5G): அமேசான் இந்தியா வலைத்தளத்தில், தற்போது இந்த ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1500 தள்ளுபடியை (கூப்பன் ஆபர் உட்பட) பெற்று ரூ.11,999 க்கு வாங்க கிடைக்கிறது.

ரியல்மி நார்சோ 70எக்ஸ் 5ஜி-யின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் (1080 x 2400 பிக்சல்ஸ்) எல்சிடி டிஸ்பிளே, மீடியாடெக் டைமன்சிட்டி 6100+ சிப்செட், 6ஜிபி வரை ரேம், டைனமிக் ரேம் அம்சம், 50எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப், 8எம்பி செல்பீ கேமரா, 45W சூப்பர்வூக் சார்ஜிங் உடனான 5000mAh பேட்டரி போன்றவைகளை கொண்டுள்ளது.

3. ரியல்மி நார்சோ என்65 (Relame Narzo N65): அமேசான் இந்தியா வலைத்தளத்தில், தற்போது இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1500 தள்ளுபடியை (கூப்பன் ஆபர் உட்பட) பெற்று ரூ.10,999 க்கு வாங்க கிடைக்கிறது.

4. ரியல்மி நார்சோ என்63 (Relame Narzo N63): அமேசான் இந்தியா வலைத்தளத்தில், தற்போது இந்த ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.500 தள்ளுபடியை (கூப்பன் ஆபர் உட்பட) பெற்று ரூ.7,999 க்கு வாங்க கிடைக்கிறது.

5. ரியல்மி நார்சோ 70 5ஜி (Relame Narzo 70 5G): அமேசான் இந்தியா வலைத்தளத்தில், தற்போது இந்த ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.15,999 முதல் வாங்க கிடைக்கிறது. ரூ.20,000 க்குள் ஒரு நல்ல ஸ்மார்ட்போனை தேடும் எவரும் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.

ஏனென்றால் இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 சிப்செட், விர்ச்சுவல் ரேம் அம்சத்தின் கீழ் 16ஜிபி வரையிலான ரேம், ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ரியல்மி யுஐ 5.1, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவு உடனான 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 16எம்பி செல்பீ கேமரா, 67W வயர்டு SuperVOOC சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000mAh பேட்டரி போன்றவைகளை கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme Narzo Week Sale in Amazon India Buy These 5 Smartphones At Cheap Price Before July 7
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X