Home
Mobile

வெளுக்குது NARZO சேல்.. 10001mAh பேட்டரி.. 80W ஃபாஸ்ட் சார்ஜிங்.. மார்ச் 20 கடைசி.. எந்தெந்த மாடல்கள்?

ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி நார்சோ பவர் டேஸ் சேல் (realme NARZO Power Days Sale) தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேதியில் ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கு கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கும். எந்தெந்த மாடல்களுக்கு இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கும் என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

மார்ச் 17ஆம் தேதி முதல் மார்ச் 20ஆம் தேதி வரையில் இந்த ரியல்மி நார்சோ பவர் டேஸ் சேல் நடக்கிறது. அமேசான் தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். ரியல்மி நார்சோ 90 5ஜி, ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி மற்றும் ரியல்மி நார்சோ பவர் 5ஜி ஆகிய ஸ்மார்ட்போன்களை டிஸ்கவுண்ட் விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

வெளுக்குது NARZO சேல்.. 10001mAh பேட்டரி.. 80W ஃபாஸ்ட் சார்ஜிங்!

ரியல்மி நார்சோ 90 5ஜி (realme NARZO 90 5G): 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.16,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.18,499ஆக இருக்கிறது. ரூ.750 டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ஆகவே, ரூ.16,249 ஆரம்ப விலைக்கு வாங்கி கொள்ளலாம். மார்ச் 20ஆம் தேதி வரையில் இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கும்.

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 மேக்ஸ் 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6400 Max 6nm) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் உள்ளது. 6.57 இன்ச் (2372 x 1080 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே உள்ளது. 50 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா மற்றும் 50 எம்பி செல்பீ உள்ளது. 60W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7000mAh பேட்டரி கொடுக்கப்பட்டு உள்ளது.

ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி (realme NARZO 90X 5G): 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.13,999ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.15,499ஆக இருக்கிறது. ரூ.500 டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ஆகவே, ரூ.13,499 ஆரம்ப விலைக்கு வாங்கி கொள்ளலாம். மார்ச் 18ஆம் தேதி வரையில் இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கும்.

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) கிடைக்கிறது. 6.8 இன்ச் (1570 x 720 பிக்சல்கள்) எல்சிடி டிஸ்பிளே கிடைக்கிறது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா உள்ளது.

சோனி ஐஎம்எக்ஸ்852 (Sony IMX852) சென்சார் கிடைக்கிறது. 1080p வீடியோ ரெக்கார்டிங் மற்றும் செகண்டரி கேமரா கிடைக்கிறது. 8 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. 7000mAh பேட்டரி மற்றும் 60W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட்டு உள்ளது. MIL-STD 810H சர்டிபிகேஷன், IP65 ரேட்டிங் மற்றும் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கரை கொடுத்து உள்ளது.

ரியல்மி நார்சோ பவர் 5ஜி (realme NARZO Power 5G): 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.27,999ஆக இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.24,999ஆக இருக்கிறது. ரூ.2,000 பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.1,000 கூப்பன் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.26,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 அல்ட்ரா 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7400 Ultra 4nm) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் உள்ளது. 6.8 இன்ச் (1280 x 2800 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே உள்ளது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 16 எம்பி செல்பீ உள்ளது. 80W சார்ஜிங் மற்றும் 10001mAh பேட்டரி உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
realme NARZO Power Days Sale Deals on realme NARZO 90 5G realme NARZO 90X 5G realme NARZO Power 5G
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X