மீண்டும் மீண்டுமா.. 10001mAh பேட்டரி.. சோனி கேமரா.. மார்ச்.5-ல் களமிறங்கும் புது Realme 5ஜி போன்.. எந்த மாடல்?
ரியல்மி நிறுவனம் கடந்த மாதம் இந்தியாவில் 10001mAh பேட்டரி உடன் ரியல்மி பி4 பவர் 5ஜி (Realme P4 Power 5G) ஸ்மார்ட்போனை ரூ.25,999 விலையில் அறிமுகம் செய்தது. இந்த போனுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இந்நிலையில் மீண்டும் 10001mAh பேட்டரி கொண்ட ஒரு புதிய 5ஜி போன் அறிமுகம் செய்ய உள்ளது ரியல்மி நிறுவனம்.
அதாவது இந்தியாவில் வரும் மார்ச் 5-ம் தேதி மதியம் 12 மணி அளவில் ரியல்மி நார்சோ பவர் 5ஜி (realme Narzo Power 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது ரியல்மி நிறுவனம். மேலும் இந்த போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும். இப்போது ஆன்லைனில் வெளியான இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

ரியல்மி நார்சோ பவர் 5ஜி அம்சங்கள் (realme Narzo Power 5G Specifications): 6.8-இன்ச் கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே உடன் ரியல்மி நார்சோ பவர் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 6500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 1.07 பில்லியன் கலர்ஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
ரியல்மி நார்சோ பவர் 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா (Sony IMX882 சென்சார்) + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா உள்ளன. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி உடன் ரியல்மி நார்சோ பவர் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ரியல்மி ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் ரியல்மி நார்சோ பவர் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் மேம்பட்ட ஏஐ அம்சங்கள் உள்ளன. அதேபோல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியுடன் இந்த புதிய ரியல்மி போன் அறிமுகம் செய்யப்படும்.
Realme UI 7.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு புதிய ரியல்மி நார்சோ பவர் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும்.

10001mAh பேட்டரி உடன் ரியல்மி நார்சோ பவர் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W வயர்டு சார்ஜிங் மற்றும் 27W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய ரியல்மி போனில் உள்ளன. மேலும் ரியல்மி நார்சோ பவர் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications