வெளுத்துவிட்ட ரியல்மி.. ரூ.11499 பட்ஜெட்ல 12GB ரேம்.. 2TB மெமரி.. ஓம்னிவிஷன் கேமரா.. எந்த மாடல்?
இந்திய பட்ஜெட் பிரியர்களை தட்டித்தூக்கும் விதமாக ரூ.11,000 பட்ஜெட்டில் 12ஜிபி ரேம், 2டிபி மெமரி, சாம்சங் சென்சாருடன் 50எம்பி கேமரா, 15W சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்களுடன் ரியல்மி நார்சோ என்65 (Realme NARZO N65) போன் விற்பனைக்கு வருகிறது.
ஆண்ட்ராய்டு 14 ஓஸ், 6 ஜிபிக்கான டைனாமிக் ரேம் போன்ற மற்ற பீச்சர்களிலும் மிரளவிடுகிறது. மேலும், லைட் ஃபெதர் டிசைனில் பிரீமியம் லுக் கொடுக்கிறது. இந்த ரியல்மி நார்சோ என்65 போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ரியல்மி நார்சோ என்65 5ஜி அம்சங்கள் (Realme NARZO N65 5G Specifications): இந்த ரியல்மியில் சாம்சங் ஜேஎன்1 (Samsung JN1) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது.
இந்த பட்ஜெட்டிலும் ஓம்னிவிஷன் ஓவி08டி10 (OmniVision OV08D10) சென்சாருடன் 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. ஆகவே, பட்ஜெட் செக்மெண்ட்டில் பக்கா கேமரா மாடலாக இந்த ரியல்மி நார்சோ என்65 5ஜி போனின் அவுட்புட் இருக்கும். 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) சப்போர்ட் வருகிறது.
அதேபோல 6 ஜிபிக்கான டைனாமிக் ரேம் (Dynamic RAM) வருகிறது. 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கிறது. IP54 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistance) கொண்டிருக்கிறது.

இந்த ரியல்மி நார்சோ என்65 5ஜி போனில் 6.67 இன்ச் (1604 x 720 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு வாட்டர் டிராப் சப்போர்ட் கொண்ட டிஸ்பிளே மாடலாகும். மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 625 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.
கேமராவை போலே கம்மி பட்ஜெட்டில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட மாடலாக இந்த ரியல்மி நார்சோ என்65 5ஜி போன் இருக்கிறது. ரியல்மி யுஐ 5.0 (realme UI 5.0) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் வருகிறது.
3.5 மிமீ ஆடியோ ஜாக், அல்ட்ரா லீனியர் பாட்டம்-போர்டெட் ஸ்பீக்கர் (Ultra Linear Bottom-ported Speaker), டைப்-சி சார்ஜிங் (USB Type-C Charging), டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) மற்றும் மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) வருகிறது. 5000mAh பேட்டரி, 15W சார்ஜிங் கொண்டிருக்கிறது.
இந்த ரியல்மி நார்சோ என்65 5ஜி போனில் ஆம்பர் கோல்டு (Amber Gold) மற்றும் டீப் கிரீன் (Deep Green) ஆகிய 2 கலர்கள் விற்பனைக்கு வர இருக்கிறது. இதன் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.11,499ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.12,499ஆகவும் இருக்கிறது.
அமேசான் (Amazon) தளத்தில் மே 31ஆம் தேதி முதல் விற்பனை தொடங்குகிறது. ரூ.1000 அறிமுக சலுகையுடன் விற்பனை செய்யப்பட இருக்கிறது. ஆகவே, 50 எம்பி சாம்சங் சென்சார், 15W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட இந்த ரியல்மி நார்சோ என்65 5ஜி போனை வெறும் ரூ.10,499 ஆரம்ப விலையில் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








