Home
Mobile

மே 28 உறுதி.. 50எம்பி கேமரா.. 5000எம்ஏஎச் பேட்டரி.. இந்தியாவுக்கு வரும் ரியல்மி 5ஜி போன்.. எந்த மாடல்?

ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி நார்சோ என்65 5ஜி (Realme Narzo N65 5G ) ஸ்மார்ட்போனை அடுத்த வாரம் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த போன் வரும் மே 28-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் அமேசான் தளத்தில் ரியல்மி நார்சோ என்65 5ஜி போனை வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

மே 28 உறுதி..  இந்தியாவுக்கு வரும் ரியல்மி 5ஜி போன்.. எந்த மாடல்?

ரியல்மி நார்சோ என்65 5ஜி அம்சங்கள் (Realme Narzo N65 5G specifications): சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ரியல்மி நார்சோ என்65 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்த போன் ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

IP54 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistance) உடன் வெளிவரும் இந்த அசத்தலான ரியல்மி நார்சோ என்65 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளேவுடன் இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் 50எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

மே 28 உறுதி..  இந்தியாவுக்கு வரும் ரியல்மி 5ஜி போன்.. எந்த மாடல்?

அதேபோல் 5000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் ரியல்மி நார்சோ என்65 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். பின்பு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner)வசதி, 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, யுஎஸ்பி டைப்-சி, வைஃபை உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த ரியல்மி ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் ரியல்மி ஜிடி 6டி(Realme GT 6T) போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

ரியல்மி ஜிடி 6டி அம்சங்கள் (Realme GT 6T specifications): 6.78-இன்ச் எல்டிஒபி அமோலெட் டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது இந்த போன். 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 6000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 100 % டிசிஐ-பி3 கலர் காமட் (DCI-P3 Color Gamut), 2160Hz அல்ட்ரா-ஹை ஃபிரிகொன்சி பிடபுள்யூஎம் டிம்மிங் (Ultra High Frequency PWM Dimming) மற்றும் கார்னிங் கொரில்லா விக்டஸ் 2 பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.

அதேபோல் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 (Snapdragon 7+ Gen 3) சிப்செட் வசதி கொண்டுள்ளது இந்த ரியல்மி ஜிடி 6டி ஸ்மார்ட்போன். மேலும் இந்த போனில் அட்ரினோ 732 ஜபியு (Adreno 732 GPU) கிராபிக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.

மே 28 உறுதி..  இந்தியாவுக்கு வரும் ரியல்மி 5ஜி போன்.. எந்த மாடல்?

குறிப்பாக OIS ஆதரவு கொண்ட 50எம்பி சோனி எல்ஒய்டி-600 சென்சார் (Sony LYT-600 sensor) + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி போன். குறிப்பாக இந்த போனில் 4கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி சோனி ஐஎம்எக்ஸ்615 சென்சார் (Sony IMX615 sensor)இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 5500எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் ரியல்மி ஜிடி 6டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 120 வாட்ஸ் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (120W SuperVOOC fast charging) வசதியும் உள்ளது. சில நிமிடங்களில் இந்த போனை சார்ஜ் செய்துவிட முடியும்.

ரியல்மி ஜிடி 6டி ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.30,999-ஆக உள்ளது. வரும் மே 29-ம் தேதி இந்த ரியல்மி ஜிடி 6டி அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme Narzo N65 5G India Launch Date Revealed: check specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X