Home
Mobile

என்னது? வெறும் ரூ.10,000-க்கு.. 2TB ஸ்டோரேஜ், 120Hz டிஸ்பிளே, Rainwater ஸ்மார்ட் டச், 5000mAh பேட்டரி-ஆ!

என்னது? வெறும் ரூ.10,000 பட்ஜெட்டில் 2டிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜிற்கான ஆதரவு, 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான எச்டி பிளஸ் டிஸ்பிளே, ரெயின்வாட்டர் ஸ்மார்ட் டச் அம்சம், 5000எம்ஏஎச் பேட்டரி-ஆ.. என்று ஷாக் ஆகும்படியான அம்சங்களுடன் புதிய ரியல்மி போன் அறிமுகமாகிறது.

அது ரியல்மி நார்சோ என்65 5ஜி (Realme Narzo N65 5G) மாடலாகும். இது வருகிற மே 28 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ரியல்மி நிறுவனத்தின் பட்ஜெட்-விலை சீரிஸ் ஆன நார்சோவின் கீழ் இணையும் இந்த ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? இது வேறு என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:

என்னது? வெறும் ரூ.10,000-க்கு.. 2TB ஸ்டோரேஜ், 5000mAh பேட்டரி-ஆ!

உறுதிப்படுத்தப்பட்ட அம்சங்களை பொறுத்தவரை, ரியல்மி இந்தியா வலைதளத்தில் உள்ள மைக்ரோசைட்டின்படி (Realme India Microsite), ரியல்மி நார்சோ என்65 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 625 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.67-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டிருக்கும்.

டிசைனை பொறுத்தவரை, ரியல்மி நார்சோ என்65 5ஜி ஸ்மார்ட்போனில் பிளாட் டிஸ்பிளே மற்றும் மூன்று பக்கங்களிலும் மெலிதான பெசல்கள் ஆனால் சற்று தடிமனான 'சின்' உள்ளது. செல்பீ கேமராவிற்காக டிஸ்பிளேவின்மேல் மைய பகுதியில் ஹோல்-பஞ்ச் ஸ்லாட் உள்ளது.

மேலும் ரியல்மி நார்சோ என்65 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரெயின்வாட்டர் ஸ்மார்ட் டச் அம்சத்தையும் கொண்டிருக்கும். கூடவே தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான ஐபி54 ரேடிங்கையும் கொண்டிருக்கும் சிப்செட்டை பொறுத்தவரை, இது மீடியாடெக் டைமன்சிட்டி 6300 5ஜி சிப்செட் (MediaTek Dimensity 6300 5G SoC) மூலம் இயங்கும்.

இதுதவிர்த்து ரியல்மி நார்சோ என்65 5ஜி-க்கான மைக்ரோசைட் ஆனது, இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14-அடிப்படையிலான யுஐ உடன் அனுப்பப்படும் மற்றும் 15W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்பதையும் உறுதிப்படுத்துகிறது.

கேமராக்களை பொறுத்தவரை, ரியல்மி நார்சோ என்65 5ஜி ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா யூனிட்டை கொண்டுருக்கும். அளவீட்டைல் இது 7.89 மிமீ தடிமன் மற்றும் 190 கிராம் எடையுள்ளதாக இருக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடைசியாக இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 2டிபி வரையிலான ஸ்டோரேஜையும் ஆதரிக்கும்.

எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட அம்சங்களை வைத்து பார்க்கும்போது ரியல்மி நார்சோ என்65 5ஜி மாடலானது ரியல்மி சி65 5ஜி ஸ்மார்ட்போனின் ரீபேட்ஜ்டு எடிஷனாக இருக்குமென்று தோன்றுகிறது. நினைவூட்டும் வண்ணம் ரியல்மி சி65 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.10,499 க்கு அறிமுகமானது.

இதே ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.11,499 க்கும் மற்றும் ஹை-எண்ட் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.12,499க்கும் வாங்க கிடைக்கிறது. ஆக ரியல்மி நார்சோ என்65 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயமும் ரூ.10,000 - ரூ.15,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் தான் இருக்கும் என்று எதிர்பார்ப்பதில் எந்த தவறும் இல்லை.

ரியல்மி நார்சோ என்65 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை வைத்து பார்க்கும் போது, இது ரெட்மி 13சி 5ஜி (Redmi 13C 5G) உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுடன் நேரடியாக போட்டியிடும் என்பது போல் தெரிகிறது. நினைவூட்டும் வண்ணம் ரெட்மி 13சி 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.9,999 க்கும், 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.11,499 க்கும் மற்றும் ஹை-எண்ட் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.13,499 க்கும் வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme Narzo N65 5G India Launch Date May 28 Check Price Specifications Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X