வெச்சி செஞ்சிட்டாங்க.. ரூ.7999 பட்ஜெட்ல 50MP கேமரா.. 2TB மெமரி.. 45W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
ரூ.10,000 பட்ஜெட்டை விட கம்மியான விலையில் வேகன் லெதர் பேனல் கொண்ட மாடலாக ரியல்மி நார்சோ என்63 (Realme NARZO N63) போன் களமிறங்கி மார்கெட்டை மிரளவிட்டுள்ளது. பிரீமியம் டிசைனில் 50 எம்பி கேமரா, 2 டிபி மெமரி, 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி, எச்டி பிளஸ் டிஸ்பிளே போன்ற பீச்சர்களில் பட்ஜெட் பிரியர்களை அதிரவிட்டுள்ளது. இந்த ரியல்மி நார்சோ என்63 போனின் முழு பீச்சர்கள், விற்பனை மற்றும் விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ரியல்மி நார்சோ என்63 அம்சங்கள் (Realme NARZO N63 Specifications): இந்த நார்சோ போனில் 6.74 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளே வருகிறது. இந்த ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) பேனலானது, 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது.

இதுவொரு ஐ கம்போர்ட் டிஸ்பிளே (Eye Comfort Display) மாடலாகும். கேம் பூஸ்ட் (Game Boost) சப்போர்ட் கொண்டிருக்கிறது. டூயல் லைட் சென்சார் (Dual Light Sensor) வருகிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் ஆக்டா கோர் யுனிசோக் டி612 12என்எம் (Octa-Core UNISOC T612 12nm) சிப்செட் வருகிறது.
இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப ரியல்மி யுஐ (realme UI) மற்றும் மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த மாடலில் 4 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) மற்றும் 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி சப்போர்ட் வருகிறது.
இந்த ரியல்மி நார்சோவில் 50 எம்பி மெயின் கேமரா + டெப்த் சென்சார் வருகிறது. 8 எம்பி செல்பீ ஷூட்டர் கொண்டுள்ளது. இந்த மெயின் கேமராவில் ஏர் கெஸ்ச்சர் (Air Gestures) வருகிறது. காலிங் கன்ட்ரோல், ஷார்ட் வீடியோ ஸ்வைப் போன்றவற்றை டிஸ்பிளேவை தொடாமலேயே செய்து கொள்ளலாம்.

வால்யூம் பட்டன்களுக்கு கீழே டைனாமிக் பட்டன் (Dynamic Button) வருகிறது. இந்த பட்டன் மூலம் பவர் ஆன்/ஆஃப், டார்ச், கேமரா கிளிக், மியூட் மற்றும் பிளைட் மோட் ஆப்ஷன்களை பயன்படுத்தலாம். இதுபோக ஸ்மார்ட் நோட்டிபிகேஷன்களுக்கு மினி கேப்சூல் 2.0 (Mini Capsule 2.0) பீச்சர் வருகிறது.
இந்த ரியல்மி நார்சோ என்63 போனில் IP54 வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது. அதேபோல ரெயின்வாட்டர் ஸ்மார்ட் டச் (Rainwater Smart Touch) வருகிறது. இந்த போனில் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom-ported Speaker) வருகின்றன. 5000mAh பேட்டரியானது, டைப்-சி போர்ட் மற்றும் 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்டிருக்கிறது.
இந்த போனில் லெதர் ப்ளூ (Leather Blue) மற்றும் டிவைலைட் பர்பிள் (Twilight) ஆகிய 2 கலர்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. இதில் ப்ளூ வேரியண்ட்டில் வேகன் லெதர் பேக் பேனல் வருகிறது. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.8,499ஆகவும், 4 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.8,999ஆகவும் இருக்கிறது.
அமேசான் (Amazon) மற்றும் ரியல்மி.காம் (Realme.com) ஆகிய தளங்களில் ரூ.500 அறிமுக சலுகையுடன் விற்பனைக்கு வர இருக்கிறது. ஆகவே, ரூ.7,999 ஆரம்ப விலையில் வேகன் லெதர் பேனல் கொண்ட இந்த ரியல்மி நார்சோ என்63 போனை வாங்கி கொள்ளலாம். வரும் ஜூன் 10ஆம் தேதி முதல் ஆர்டருக்கு கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








