பொளக்குது விற்பனை.. ரூ.7,498 போதும்.. 50MP கேமரா.. 2TB மெமரி.. 45W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
அமேசானில் ஆர்டர் அறக்க பறக்கும் விதமாக நம்ப முடியாத டிஸ்கவுண்ட்டில் வேகன் லெதர் பேக் பேனல் மட்டுமல்லாமல், 50எம்பி மெயின் கேமரா, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி, 2 டிபி மெமரி போன்ற பீச்சர்களுடன் 7.74 மிமீ ஸ்லிம் லுக் கொண்ட ரியல்மி நார்சோ என்63 (Realme NARZO N63) போன் விற்பனைக்கு கிடைக்கிறது. ரூ.8000 பட்ஜெட்டைவிட மலிவான விலையில் பிரீமியம் டிசைன் கொண்ட மாடல்களில் இது சக்கைப்போடு போடுகிறது. இதுகுறித்த முழு விவரம் இதோ.
ரியல்மி நார்சோ என்63 விலை (Realme NARZO N63 Price): இந்த நார்சோ போனில் 8 ஜிபி ரேம் (4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 64 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் (4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.

64 ஜிபி மாடலின் விலை ரூ.8498ஆகவும், 128 ஜிபி மாடலின் விலை ரூ.8,998ஆகவும் இருக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் கூடுதல் பீச்சர்கள் வருவதால் விற்பனையில் சக்கைப்போடு போட்டுவருகிறது. இந்த விற்பனையை மேலும் அதிகரிக்கும்படி அமேசானில் (Amazon) ரூ.1000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.
இதுவொரு கூப்பன் டிஸ்கவுண்ட் சலுகையாகும். ஆகவே, இதை பெறுவதற்கு எந்தவொரு பேங்க் கிரெடிட் கார்டுகள் மற்றும் டெபிட் கார்டுகள் தேவையில்லை. ஆகவே, 8 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடலை வெறும் ரூ.7,498 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். இந்த பட்ஜெட்டுக்கு என்னென்ன பீச்சர்கள் வருகின்றன.
ரியல்மி நார்சோ என்63 அம்சங்கள் (Realme NARZO N63 Specifications): இந்த போனில் 50 எம்பி மெயின் கேமரா + டெப்த் சென்சாருடன் டூயல் ரியர் கேமரா செட்டப் (Dual Rear Camera Setup) மற்றும் 8 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த கேமராவில் நைட் மோட் (Night Mode), போட்ராய்டு மோட் (Portrait Mode) பீச்சர்கள் வருகின்றன.

மேலும், மெயின் கேமராவில் 1080p வீடியோ ரெக்கார்டிங் மற்றும் செல்பீ கேமராவில் 720p வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது. இந்த பட்ஜெட்டுக்கு 50 எம்பி கேமரா வரவேற்கத்தக்கது. அதேபோல ரெயின்வாட்டர் ஸ்மார்ட் டச் (Rainwater Smart Touch) மற்றும் மினி கேப்சூல் 2.0 (Mini Capsule 2.0) பீச்சருடன் 6.74 இன்ச் டிஸ்பிளே வருகிறது.
இதுவொரு எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்ட ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே மாடலாகும். 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது. மேலும், 450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. மிகவும் மலிவான பட்ஜெட்டிலும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது. ரியல்மி யுஐ (realme UI) உள்ளது.
இந்த ரியல்மி நார்சோ என்63 போனில் ஆக்டா கோர் யுனிசோக் டி612 12என்எம் (Octa Core UNISOC T612 12nm) சிப்செட் மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது. 5000mAh பேட்டரி டைப்-சி சார்ஜிங்குடன் வருகிறது. 2 டிபிக்கான எஸ்டிகார்டு (SD card) சப்போர்ட் உள்ளது.
பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom-ported Speaker) மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) வருகிறது. டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கனெக்டிவிட்டி கொண்டுள்ளது. இந்த ரியல்மி நார்சோ என்63 போனில் லெதர் ப்ளூ (Leather Blue) மற்றும் டிவைலைட் பர்பிள் (Twilight Purple) ஆகிய கலர்கள் வருகிறது. ப்ளூ மாடல் லெதர் வேரியண்ட்டாகும்.


Click it and Unblock the Notifications








