போனில் கூட சைவமா? Realme அறிமுகம் செய்த புது போன்.. ரூ.7000 விலையில் அல்டிமேட் அம்சங்கள்.. எந்த மாடல்?
ரியல்மி (realme) நிறுவனம் இந்தியாவில் ஒரு புதிய சைவ (vegan) ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதை நிறுவனம் ரியல்மி நர்ஸோ என்63 (realme NARZO N63) என்ற பெயருடன் அறிமுகம் செய்துள்ளது. என்னது சைவ ஸ்மார்ட்போனா? என்று சிலர் ஆச்சரியமாக கேட்கலாம். இந்த போனை ரியல்மி சுத்தமான சைவ பொருட்களை கொண்டு உருவாக்கியிருப்பதாக கூறப்படுகிது. அது என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
உலகளவில் சுத்தமான சைவ உணவு பிரியர்கள் அதிகமாகிக்கொண்டே செல்கிறார்கள். இவர்களை நாம் வீகன்ஸ் (vegans) என்று குறிப்பிடுகிறோம். தெரியாதவர்களுக்காக, முதலில் வீகன்ஸ் என்றால் என்ன என்பதை பார்க்கலாம். இறைச்சி, முட்டை அல்லது பால் பொருட்கள் போன்ற விலங்குகளிடமிருந்து வரும் எந்த உணவையும் உட்கொள்ளாத கடுமையான சைவ உணவு உண்பவர்கள் என்பது இதன் பொருளாகும்.

ரியல்மி நர்ஸோ என்63 (realme NARZO N63):
அதேபோல், தோல் போன்ற விலங்கு பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பவர்கள் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே லெதர் மூலம் உருவாக்கப்படும் தயாரிப்புகள் இப்போது பெரியளவில் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக சுத்தமான சைவ முறையில் உருவாக்கப்பட்ட வீகன் லெதர்கள் இப்போது உலகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய, சைவ லெதர் பொருளை தான் ரியல்மி நிறுவனம் அதன் புதிய ஸ்மார்ட்போனில் பயன்படுத்தியுள்ளது.
இதன் காரணமாகவே புதிய ரியல்மி நர்ஸோ என்63 (realme NARZO N63) ஒரு சைவ ஸ்மார்ட்போனாக பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் மிகவும் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு புதிய பட்ஜெட் விருப்பமாக திகழ்கிறது. இதன் சிறப்பம்சம் மற்றும் விலை பற்றிய விபரங்களை இப்போது பார்க்கலாம்.
ரியல்மி நர்ஸோ என்63 சிறப்பம்சம் மற்றும் விலை (realme NARZO N63 Specifications and Price):
- 6.74" இன்ச் கொண்ட எச்டி+ ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே (HD+ IPS LCD display)
- 1600 x 720 பிக்சல் (pixels)
- 90Hz ரெஃப்ரஷ் ரேட் (refresh rate)
- 180Hz டச் சாம்பிளிங் ரேட் (touch sampling rate)

- 450 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் (nits peak brightness)
- யுன்னிஸாக் டி612 சிப்செட் (UNISOC T612 Chipset)
- 4GB LPDDR4X ரேம் (RAM)
- 64GB / 128GB ஸ்டோரேஜ் (storage)
- 2TB வரையிலான மைக்ரோஎஸ்டி மெமரி (microSD memory)
- டூயல் சிம் (Dual SIM)
- நானோ + நானோ + மைக்ரோஎஸ்டி (nano + nano + microSD)
- ஆண்ட்ராய்டு 14 உடன் ரியல்மி யுஐ (Android 14 with realme UI)
- 50MP ரியர் கேமரா (camera)
- 8MP செல்பி கேமரா (front camera)
- பக்கவாட்டில் பின்ப்ரின்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint sensor)
- 3.5mm ஆடியோ ஜாக் (audio jack)
- டூயல் 4ஜி வோல்டி (Dual 4G VoLTE)
- வைஃபை (Wi-Fi 802.11 ac 2.4GHz + 5GHz)
- ப்ளூடூத் (Bluetooth 5.0)
- ஜிபிஎஸ் + க்ளோனஸ் (GPS + GLONASS)
- யுஎச்பி டைப்-சி (USB Type-C)
- 5000mAh பேட்டரி (battery)
- 45W சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் (SuperVOOC fast charging)
- டிவிலைட் பர்பிள் (Twilight Purple) மற்றும் வீகன் லெதர் ப்ளூ (Vegan Leather Blue)
இந்த புதிய ரியல்மி நர்ஸோ என்63 (realme NARZO N63) 4GB ரேம் + 64GB ஸ்டோரேஜ் மற்றும் 4GB + 128GB ஸ்டோரேஜ் மாடல் சாதனம் முறையே ரூ.7,999 மற்றும் ரூ. 8,499 என்ற சலுகை விலையுடன் விற்பனைக்கு வருகிறது. இதன் விற்பனை வரும் ஜூன் 10ம் தேதி மதியம் 12 மணி முதல் துவங்கி ஜூன் 14ம் தேதி வரை நடைபெறும். இந்த இடைப்பட்ட நேரத்தில் மட்டும் சலுகைகள் பொருந்தும்.


Click it and Unblock the Notifications








