Home
Mobile

ஆர்டர் அள்ளுமே.. சொன்னதை விட ரூ.1,500 கம்மி விலைக்கு Realme Narzo N61 அறிமுகம்.. ஆகஸ்ட் 6 முதல் விற்பனை!

ரியல்மி (Realme) நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் ஆக ரிய்லமி நார்சோ என்61 (Realme Narzo N61) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் நார்சோ என் சீரிஸின் கீழ் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரியல்மி நார்சோ என்63 (Realme Narzo N63) மற்றும் ரியல்மி நார்சோ என்65 (Realme Narzo N65) மாடல்களை போலவே சூப்பர்-பட்ஜெட் விலைப்பிரிவின் கீழ் வந்துள்ளது. ரிய்லமி நார்சோ என்61 ஸ்மார்ட்போனின் விலை என்ன? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? எப்போது முதல் விற்பனைக்கு வரும்? இதோ விவரங்கள்:

ரிய்லமி நார்சோ என்61 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது இன்டெக்ரேடட் மெட்டாலிக் ஃபிரேம் (integrated metallic frame), வலுவூட்டப்பட்ட கிளாஸ் (reinforced glass), தூசி மற்றும் நீர்-எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங் (IP54 dust and water-resistant rating), யுனிசாக் சிப்செட், டூயல் 4ஜி ஸ்டேண்ட்பை, 32எம்பி ப்ரைமரி கேமரா, போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.

சொன்னதை விட ரூ.1,500 கம்மி விலைக்கு Realme Narzo N61 அறிமுகம்!

ரிய்லமி நார்சோ என்61 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 1600 x 720 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 90 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் (90Hz Refresh Rate) மற்றும் 560 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (560 nits Peak Brightness) உடனான 6.74 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை (HD+ Display) கொண்டு உள்ளது.

ப்ராசஸர், ஸ்டோரேஜ் மற்றும் ஓஎஸ்-ஐ பொறுத்தவரை, ரியல்மி நார்சோ எம்61 ஸ்மார்ட்போன் ஆனது யுனிசாக் டி612 சிப்செட் (Unisoc T612 Chipset) மூலம் இயங்குகிறது. இது 6ஜிபி வரையிலான ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 (Android 14) அடிப்படையிலான ரியல்மி யுஐ (Realme UI)உடன் வருகிறது.

கேமரா மற்றும் பேட்டரியை பொறுத்தவரை, முன்னரே குறிப்பிடப்படி, இது 32 எம்பி ப்ரைமரி கேமராவை (32MP Primary Camera) கொண்டுள்ளது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்கான தேவைகளை முன்பக்கத்தில் உள்ள 5 எம்பி செல்பீ கேமரா (5MP Selfie Camera) பார்த்துக்கொள்ளும். இது 10W சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை, இது டூயல் 4ஜி (Dual 4G), வைஃபை (Wi-Fi), ப்ளூடூத் 5.0, 3.5மிமீ ஹெட்செட் ஜாக் ஆகியவைகளை கொண்டுள்ளது.

ரிய்லமி நார்சோ என்61 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இது ப்ளூ (Blue) மற்றும் பிளாக் (Black) கலர் ஆப்ஷன்களில்.. மற்றும் இரண்டு வெவ்வேறு ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 4ஜிபி ரேம் + 64ஜிபி ஆப்ஷன் ரூ.7499 க்கும், 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.8,499 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் அறிமுக சலுகையின் (Introductory Offer) ஒரு பகுதியாக ரிய்லமி நார்சோ என்61 ஸ்மார்ட்போனின் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் மீதுமே ரூ.500 பிளாட் டிஸ்கவுண்ட் (Flat Discount) கிடைக்கும். இதன் மூலம் 4ஜிபி ரேம் + 64ஜிபி ஆப்ஷனை ரூ.7499 க்கு பதிலாக ரூ.6,999 க்கும், 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனை ரூ.8,499 க்கு பதிலாக ரூ.7,999 க்கும் வாங்க முடியும்.

விற்பனையை பொறுத்தவரை, ரிய்லமி நார்சோ என்61 ஸ்மார்ட்போன் ஆனது பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான அமேசான் இந்தியா (Amazon India), ரியல்மியின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் (Realme India Website) மற்றும் ஆஃப்லைன் சில்லறை விற்பனை கடைகள் மூலம் ஆகஸ்ட் 6 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு வரும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme Narzo N61 Launched in India Price Starts From Rs 6999 Amazon Sale Begins From Aug 6
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X