Home
Mobile

இதென்ன கனவா நிஜமா.. வெறும் ரூ.8000-க்கு ArmorShell டிசைன், IP54 ரேட்டிங்.. Realme-யின் புதிய Rugged போன்!

மாதத்திற்கு 2, 3 போன்களை அறிமுகம் செய்யவில்லை என்றால் ரியல்மி நிறுவனத்திற்கு தூக்கம் வராது போல! இம்மாத தொடக்கத்தில், இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் ஜூலை 1 ஆம் தேதியன்று ரியல்மி சி63 (Realme C63) அறிமுகமானது. மேலும் வருகிற ஜூலை 30 ஆம் தேதியன்று ரியல்மி 13 ப்ரோ 5ஜி சீரிஸ் (Realme 13 Pro 5G Series) அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த சீரிஸின் கீழ் ரியல்மி 13 ப்ரோ 5ஜி மற்றும் ரியல்மி 13 ப்ரோ பிளஸ் 5ஜி என மொத்தம் 2 மாடல்கள் இருக்கும்.

இதற்கிடையில் வருகிற ஜூலை 29 ஆம் தேதியன்று ரியல்மி நிறுவனம், அதன் நார்சோ சீரிஸின் (Realme Narzo Series) கீழ் இன்னொரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யப்போவதாக அறிவித்து உள்ளது. அதென்ன மாடல்? அது என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படும்? இதோ விவரங்கள்:

வெறும் ரூ.8000-க்கு Realme-யின் புதிய Rugged போன்!

என்ன மாடல்? ஜூலை 29 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படப்போவது - ரியல்மி நார்சோ என்61 (Realme Narzo N61) ஸ்மார்ட்போன் தான். இது ரியல்மி பிராண்டின் "லேட்டஸ்ட்" மற்றும் "சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போன்" ஆக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? இது ஜூலை 29 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்று ரியல்மி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கூடவே இந்த ஸ்மார்ட்போனின் சில முக்கிய அம்சங்களையும் வெளிப்படுத்தியுள்ளது. அதன்படி இது பேக் பேனலில் 32 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவை உள்ளடக்கிய டூயல் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.

மேலும் ரியல்மி நார்சோ என்61 மாடலானது நீர் மற்றும் தூசி பாதுகாப்புக்கான ஐபி54 ரேட்டிங்கையும் பெற்றுள்ளது. கூடவே இது ரியல்மியின் ரெயின்வாட்டர் ஸ்மார்ட் டச் அம்சத்தையும் கொண்டு வருகிறது, இந்த அம்சம் ஈரமான கைகளாலும் கூட ஸ்க்ரீனை பயன்படுத்த அனுமதிக்கும். எல்லாவற்றை விடவும் முக்கியமாக, ரியல்மி நார்சோ என்61 ஸ்மார்ட்போன் ஆனது டியுவி ரெயின்லேண்ட் (TUV Rheinland) உயர் நம்பகத்தன்மை சான்றிதழ் உடனான ஆர்மர்ஷெல் ப்ரொடெக்ஷனையும் (ArmorShell Protection) கொண்டுள்ளது.

என்ன விலைக்கு வரும்? கடந்த மாதம் வேகன் லெதர் பேக் டிசைனுடன் அறிமுகமான ரியல்மி நார்சோ என்63 (Realme Narzo N63) ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் ரூ.7,999 Iஆக இருந்தது. அதைவைத்து பார்க்கும் போது ரியல்மி நார்சோ என்61 ஸ்மார்ட்போனும் ரூ.10,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் தான் அறிமுகமாகும். இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ரூ.8,499 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.

ரியல்மி 13 ப்ரோ 5ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும்? முன்னரே குறிப்பிட்டபடி, இந்த சீரிஸின் கீழ் ரியல்மி 13 ப்ரோ 5ஜி (Realme 13 Pro 5G) மற்றும் ரியல்மி 13 ப்ரோ பிளஸ் 5ஜி (Realme 13 Pro Plus 5G) என 2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும். இரண்டு மாடல்களுமே ஜூலை 30 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்.

உறுதி செய்யப்பட்ட அம்சங்களை பொறுத்தவரை, இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே டிவைஸ் மற்றும் கிளவுட்-பேஸ்டு ஏஐ இமேஜிங் ஆதரவு கொண்ட மூன்று அடுக்கு ஏஐ இமேஜிங் தொழில்நுட்பமான ஹைப்பர்இமேஜ் பிளஸ் கேமரா செட்டப்பை பேக் செய்யும். அதிலும் குறிப்பாக ப்ரோ பிளஸ் மாடலில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடனான 50-மெகாபிக்சல் ப்ரைமரி Sony LYT-701 சென்சார் மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50-மெகாபிக்சல் Sony LYT-600 பெரிஸ்கோப் ஷூட்டர் இடம்பெறலாம்.

ரியல்மி 13 ப்ரோ 5ஜி சீரிஸ் என்ன விலைக்கு வரும்? ரியல்மி 13 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.29,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம்என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுகையில் உள்ள ரியல்மி 13 ப்ரோ பிளஸ் 5ஜி மாடல் ஆனது ரூ,34,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம். சரியான விலை விவரங்கள் மற்றும் விற்பனை தேதி ஜூலை 30 நடக்கும் வெளியீட்டு நிகழ்வின் போது தெரியவரும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme Narzo N61 India launch date July 29 Check out Confirmed Specifications Expected Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X